சாது மிரண்டால்

தனதொருமை எடுத்து ஞாலச்சபையில்
கோரைப்பல் செலுத்தி தனதாயாக்கத்
தறிகெட்டு வாழும் மானுடமே!

இனக்குழுவிற்கு தனிப்பட்ட
இலக்கணம் பிரகடனப்படுத்திக்
கொண்டீர், பார்த்தோம்!

மதம் எனப்பேர் கொண்டு
பதம் பார்த்தீர் மனிதத்தை,
ஆம் இதையும் பார்த்தோம்!

சணல் பின்னிய சரிகையில் வெங்காயக்
கொள்முதல்போல் அன்றி
அரிசிச் சோறு வடிப்பது போல்
உள்ளவை யாதும் உமதாய் சொல்கிறீர்!

க்கிக்கிக்கே.... எண்ணத்தில் சிரிப்பு
தடம் புரண்டோடுகிறது!
கிடைத்தவரைக் கிழித்து நூற்று தன்
கிழிசலைத் தைத்துக்கொள்ளும்
குறுதிகுடிக்கும் பேய்களே!

உம் தடுமனுக்கு மாத்திரையாய்
இருப்பர் சிலர்,
யாவரும் பேய்த்திரையாய்
எழுந்தாடும் நாட்களில்
உன் சாதிப்பேரை சொல்லி
விலக்கு வாங்கிக்கொள்
துப்பிருந்தால்!

உம் சாவின் நெடியை உமக்கே
நுகரச்செய்யும் அவர்களின் சினுங்களும்
சினம் உமிழும்!

இதிலோர் எள்ளிய நகைப்பாய்
பொதுவுடமை கக்குவதாய் எண்ணி
சாதி மறுப்பு நாடகக்கலை
அரங்கேற்றி
தன்னியவன்களை கூட மதித்துக்காக்கத்
துப்பில்லாது வாய்மையென வாயில் பேசும் பெரும்பேச்சுக்காரன்களே!

யாரும் யாரைகாள் எவரெவரும்
இங்கு மூடம் வெட்டி சகுணம் காட்டி உம்
குரல்வளை கடிக்கும் பூனையாய்,

பிறப்பிறப்பின் இடையே உம்
ராச்சியத்திற்காய்
நற்துணைத் தூவும் நலனிகள் யாவும்
உம்போல் யூகம் இயற்றினால்
உம் ராச்சியத்தின் நடுநெற்றியில்
மூத்திரம் குளிப்பாட்டி திமிரும் உம்
கழிமேல் கவை அமர்த்தி
மலத்தின் மைகொண்டு
எச்சரிக்கைப் பச்சை குத்திவிடுவார்கள்!

ஏகம் மறந்து யாவும் புரிந்தால்
சாவோ காவோ முடிசாம்பல்தானோ
என நீவிர் அறிய முற்படும்
முன்கால்,

நினைந்திடு யாவும் ஒருவென
எவரும் ஒருவென,
தாமாய் ஒன்றி உமக்குத்
தகடும் தரவாது,

யாவும் ஒருவர் எவரும் ஒருவர்,
சாதிகண்டால் உம்மை
நீதி கடிக்கும்,
உம் சேதி கேட்டு
தினம் நாதி இழிக்கும்,

வீதியில் நிறுத்தி உம்
விழிகளை நொறுக்கும்,

ஓ..... சரி ஞாபகத்தின் தற்கால
நுனியில் சொல்ல முனைந்தேன்,

"சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்".

எழுதியவர் : சக்தி கேஷ். (26-Feb-18, 3:03 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 66

மேலே