உலகம்

போர்களே நடவாவிடில் பயணற்று போகும் அழிவுக்கான ஆயுதங்கள்...

சிலர் லாபம் பெற கொல்லப்படுகிறார்கள் வேறு சிலர்...

கொடியவனின் கண்களுக்கு தென்படுவதில்லை குழந்தைகள்...

குழந்தைகளை கொன்று குவிக்கிறார்கள் ஆறறிவு மனிதர்கள்...

தன் சந்தோஷமே முக்கியமென்கிறது சுயநலத்தில்...

வாழ்க்கை வாழலாம் பிறரைப் பாதிக்காவண்ணம்...

பொழுதுபோக்கிலே மாறிவிடுகிறது வாழ்க்கையின் போக்கு...

நல்ல கைகளிருந்தும் தேடுகிறது தன் உடைமை சுமக்க வேறு கைகளை...

நல்ல கால்களிருந்தும் தேடுகிறது தன்னைச் சுமக்க வாகனம்...

சோம்பேறியென்ற சாத்தான் பேசுகிறான் கடவுள் இல்லையென்று...

அண்ணன் இரத்தத்தில் மிதக்கிறான் தம்பி போதையில்...

நம்பிக்கைத் துரோகத்தில் ஊசலாடுகிறது மனித வாழ்வு...

விஷமென்று தெரிந்தே அருந்துகிறார்கள் எனில் யாரால் தடுக்க முடியும்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Feb-18, 6:00 pm)
Tanglish : ulakam
பார்வை : 2421

மேலே