தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 20 --- முஹம்மத் ஸர்பான்

191. மின்மினிப் பூச்சிகளின் மரணத்தில்
இலட்சியங்கள் அணைந்த தீபம்

192. தூரத்து துருவங்களை நேசிக்கும்
இயற்கையின் முதற்கடிதம் காற்று

193. நாகரீகம் காமத்தின் அழைப்பிதழ்
கற்பழிப்பு அதிலுள்ள எழுத்துப்பிழை

194. எழுதப்படாத நாட்குறிப்பு பக்கங்கள்
துவண்டு போன மனதின் மெளனங்கள்

195. ஆபிரிக்க தேசத்தின் வானிலை
சாக்கடை நீரையும் பருகக்கூடும்

196. பாலைவனத்தின் கன்னித் தன்மை
பால்மழையால் நீராட்டப்படுகிறது

197. முட்செடியை கையில் ஏந்தி
முல்லைக்கு சாசனம் தீட்டும்
விருதுகள் இலக்கிய கொலைகள்

198. இல்லாதவன் புன்னகைக்கும் போது
உள்ளம் துடிப்பதை உணரலாம்
இருப்பவன் கைகுலுக்கும் நேரத்தில்
வன்மத்தின் புதைகுழியை காணலாம்

199. மென்மையான மலர்களின் கற்புக்கு
புயலாய் வீசும் காற்று தான் நட்பு

200. குருடன் வர்ணித்த வானவில்கள்
கல்லறைச் சூரியனாக உதிக்கலாம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Feb-18, 11:35 am)
பார்வை : 223

மேலே