ஏழை விவசாயி

வெறும் பத்தாயிரம் ரூபாய்
வங்கியில் கடன் வாங்கினான்
அந்த ஏழை விவசாயி தன
காணி நிலத்திற்கு நீர் இறைக்க
கேணிக்கோர் 'பம்ப்செட்' போட,
மூன்று வருடங்கள் மாறி பொய்த்திட
என் செய்வான், பாவம் அந்த
ஏழை விவசாயி, காணி நிலத்தில்
விளைச்சல் இல்லை, வறட்சியின்
கொடுமையில் மாடும் இறக்க
மக்களும் மனைவியும் தானும்
'மழை வேண்டி' இறைவனை வேண்டி
பட்டினியிலேயே பாதி நாள் கழிக்க
'வங்கியிலிருந்து' வந்தது 'நோட்டீஸ்'
வாங்கிய பத்தாயிரம் வட்டியுடன்
மூன்று பங்காக, பணம் கட்டவில்லை என்றால்
அவன் காணி நிலம் ஜப்தி போகுமென்று

எது செய்வதென்று அறியாத ஏழை அவன்
நேற்று தன்னையே 'மாய்த்துக்கொள்ள'
இன்று,' வீதியில்' வந்தது அவன் குடும்பம்
யார் காப்பார் ...........தெரியவில்லை

செய்தியில் படிக்கிறேன் அன்று
"ஆயிரம் ஆயிரம் கோடி வங்கி பணம்
ஆதாரம் இன்றி கடன் கொடுப்பு,
வாங்கியவர்கள் தலை மறைவு.....
வங்கியில் சலசலப்பு....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-18, 8:17 am)
Tanglish : aezhai vivasaayi
பார்வை : 224

மேலே