சின்ன வயது சொன்ன ஞாபகம் -1

தவழ்ந்து சென்ற நாட்கள் நினைவில் வரவில்லை ,.
தத்தி தடுமாறி , நடந்த நாட்களிலிருந்து
ஞாபகம் துளிர்விடுகின்றன ,.

இந்த பரந்து விரிந்த உலகம்
ஓடி ஆடி விளையாடுவதற்காவே
படைக்கப்பட்டதாய் ஞாபகம் .

வெட்டவெளியில் ஓடியபோதெல்லாம்
வானத்தையும் , மேகத்தினுடே ஒளிந்து
கடந்த போன சூரியனையும்
கைபிடித்து இழுத்து போன ஞாபகம் ,.

கொட்டித்தீர்த்த மழையினில்,
கால் நனைத்து கை நீட்டி பிடித்த
துளிகளில் மொத்த மழையினையும்
அள்ளி அடைத்த ஞாபகம் .

காலை மாலை நான் நடந்த வேலை
முன்னும் பின்னும் என்னை தொடர்ந்த
என் நிழலோடு நடைபோட்டு
கதை பேசி கடந்த ஞாபகம் .

பகலெல்லாம் பரிட்சயமாய்
தாவி குதித்து ஏறி தவழ்ந்த
வேப்ப மரமும் , புளியமரம்
இரவில் எதிரிகளாய் ,.
பேயும் பிசாசும் அதில் ஆடுகிறதென்று
அதிர்ந்து வீட்டில் அடைந்து கிடந்த ஞாபகம் .

ஆடும் , மாடும், கோழியும் , குருவியும்
கொஞ்சி குலாவினோம் குடும்பமாய் ,
சின்ன பல்லி துள்ளியதும் , பயந்து
ஒடுங்கியதும் பளிச்சிடும் ஞாபகம் ,
அதை என்னி இப்போ சிரிச்சிடும் ஞாபகம்தான் .

எழுதியவர் : (27-Feb-18, 7:08 pm)
பார்வை : 59

மேலே