என்னவளே நீ என்னுள்ளே
என்னவளே எனக்காக வந்து விடு
உன் அன்பில் என்னை சிறையெடு !
விழி மூடும் இமைப்போல
நான் இருப்பேன்
உன் விரலோடு எனைக்கோர்து
நான் கரை மிதிப்பேன் !
சாரலாக வீசும் மாமழையென்
பூ சோலையில் உன்னை அழகாய் பூக்க செய்வேன்
வான் நிலவாக ஒளிவீசும் முக ஒளியில் உன் வானமாய் நானிருப்பேன்!
எப்போது உன்னோடு உனக்காக என்னவளே நீ வந்து விடு எனக்காக .
படைப்பு
ரவி.சு