காதல் மறக்கவில்லை💘

களவும் கற்று மற என்றார் ஆன்றோர்
கற்காமலே களவு மறந்தேன் நல்லவனாக★
காதலும் கற்று மற என்று யாரும் சொல்லவில்லையே! நான்
காதலிக்காமலே கனவுலகம் மிதக்கிறேன்!காதலித்து விட்டால்
மறக்க முடியுமா?காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் என்றல்லவா சொல்லி விட்டு போயினர்;
காதல் நினைத்து பசி மறக்கிறது
காதல் நினைத்து உலகம் மறக்கிறது
காதல் நினைத்து மொழி மறக்கிறது
எதைஎதையோ இழக்கிறோம்,
எதுஎதுவோ வாழ்வில் நடக்கிறது,
விரைவில் மறக்கிறோம்.
ஆனால், ஒரு முறை காதல் வந்தால்
காலன் முறை வரும் வரையிலும்
மறப்பதில்லை!
காதல் பலமா? பலவீனமா?
காதல் மறப்பது பலமா?பலவீனமா?★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (1-Mar-18, 10:18 pm)
பார்வை : 299

மேலே