காத்துகிடக்கிறேன்

இரவைக் களவாடும் நிலவாய்
இமையைக் களவாடும் கண்களாய்
இதழாய் களவாடும் வரிகளாய்
என் இதயத்தை விலைபேசிய அன்பாய்
என் உயிர் பிரியும் நொடியில்
விழியோரம் வழிந்தோடும் சிறு துளி கண்ணீராய்
என்னுள் நுழைந்தவளே
ஏனோ நீ பேசிச் சென்ற பொழுதுகள்
உன்னுடன் கழித்த நிமிடங்கள்
நீ கொடுத்த ஞாபக சின்னங்கள்
சிறு விஷயத்திற்கும் கோபம் கொள்வேன்
அதைத் தணிக்க நீ முத்தத்தில் பதித்த மொத்த இடமும்
மறு ஜென்மம் எடுக்க தவிக்குதடி
தலைக்கனம் அற்றவனாய்
தவழும் குழந்தையாய் இருக்கிறேனேடி
நீ சென்ற சோலையை எண்ணி
மிண்டும் வருவாய் என காத்துகிடக்கிறேன்
கண்கள் அற்ற குருடனாய்.....

எழுதியவர் : சண்முகவேல் (2-Mar-18, 10:09 am)
பார்வை : 424

மேலே