உன்னருகில்

உன்னருகில் நான் இருந்தால்
மயிலின் அகவல் கூட மதுரகீதமாய்
மயக்குகிறது,
துந்துபி நாதம் தந்தி வீணை நாதமாய் நெஞ்சினித்தது,★
அதுவே,நீ இல்லை எனில்,
அளிம்பகத்தின் அகவல் கூட
நாராசமாய் வதைக்கிறது★
வைகறையின் பூபாளம் ஒப்பாரியாய்
எனை பாதாளம் புதைக்கிறது★
ஒரு போதும் எனை விட்டு நீங்காதே★
சிறு பொழுதும் என்நெஞ்சு தாங்காதே★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (2-Mar-18, 11:54 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : unnarukil
பார்வை : 545

மேலே