சருகாகிய சின்னமலர்

பெண்ணாய் பிறந்தேன்
பூவாய் மலர்ந்தேன்
விழிகளால் கவர்ந்து
புன்னகையைப் பறித்து
இதயத்தை திருடி விட்டு
கனவுகள் சிறகடிக்க
காதல் என்று நினைத்தவள்
பூக்களை காெடுத்தாள்
வாசத்தை உறிஞ்சி விட்டு
இதழ்களை எறிந்து விட்டார்கள்
சருகாகிப் பாேனது
சின்ன மலராென்று