எதிர்பாராத திருப்பம்
எதிர்பாராத திருப்பம்
வாழ்கை மிகவும் சுவாரசியமானது இதில் எதிபார்ததும் நடக்கும், எதிர்பார்க்காததும் நடக்கும்,பேருந்தில் பயணம் செய்யும் சிலர் ஜன்னல் ஓரமாக இருக்கை கிடைத்தால் மட்டுமே அந்த பேருந்தில் ஏற வேண்டும் என்று காத்திருந்து ஏறுவார்கள் ஆனால் இருக்கை கிடைத்தாலே போதும் என்று நினைக்கும் சிலருக்கு அந்த ஜன்னல் எதிர்பாராமல் கிடைத்துவிடுகிறது காத்திருப்பவனுக்கு இடம் கிடைக்காமலே கூட போகிறது.
ஆம் இது பேருந்து பயணத்தில் மட்டும் அல்ல வாழ்க்கை பயணத்திலும் இதுவே நடக்கிறது,
சேகர் சரியா 9.30குலாம் ஆபிஸ்க்கு வந்துடுடா சரியா 12 மணிக்கு பிளேட் வந்துடும் அப்படியே அங்க இருந்து நீங்க உங்க சுற்றுலாவ தொடங்குறிங்க என்றான் சேகரின் முதலாளி பாண்டியன். அண்ணே ஒரு முடிவோடதான் இருக்கீங்க அப்போ நா ஆபீஸ் வேல பாக்குறது உங்களுக்கு பிடிக்கலையா ஒரு கைடு செய்ற வேலைய நான் எப்படி அண்ணே செய்வேன்.
சேகரின் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் கிராமம் சென்னை அவனுக்கு புதிது இல்லை,வீட்டிற்கு ஒரு பிள்ளை தாயும் இவனும் மட்டுமே வீட்டில் தன் தந்தையின் உழைப்பில் அவன் சாப்பிட்டது கொஞ்ச காலம் தான் காரணம் அவன் தந்தை இவன் எட்டாவது படிக்கும் போதே பிரிந்து சென்றுவிட்டார் (எமலோகம் அல்ல).இவன் சிறுவயதில் இருந்தே உழைப்பது மட்டுமே இவன் வேலை நண்பர் ஒருவர் மூலம் இந்த டிராவல்ஸ்ல வேலை கிடைத்தது நம்ம சூரியவம்சம் படத்துல சொல்லுற மாறி இந்த ஆபிஸ்ல சகலமும் சேகர்தான் பேங்க் வேலைல இருந்து இவர்கள் டிராவல்ஸ் மூலம் சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை எடுத்து அவர்கள் பயணம் தொடங்க்கி வைப்பது முதல் எல்லாம் சேகர்தான்,ஆனால் இப்போது இவனே கைடு வேலையும் பார்க்க சொல்லுரு இவன் முதலாளி பாண்டியன்(கைடு வச்சிகிட்டா காசு அதிகம் காச மிச்சம் பண்ண சொல்லுறாரு)
டேய் சேகரு வர போறது வெள்ளைக்காரன் இல்லடா நம்ம மலேசியா தமிழ் ஆளுகத் தான் கவலைபடாத பத்து நாள்ல இப்டினு ஓடிரும்,சரி என்று தலையாட்டினான் அவர் கையில் இருந்த 20 ருபாய் கொடுத்து சரி நீ சாப்டுட்டு ரூம் போ காலைல வந்துரு என்னக்கு நேரம் ஆச்சி நா போறேன் என்று பாண்டியன் தன் கருப்பு கலர் பல்சர் வண்டியில் இருட்டில் போய் மறைந்தார்
காலை சரியாக 9.30க்கு ஆபிஸ் வந்தான் வரும்போதே பத்து நாட்களுக்கு தேவையான துணிகளையும் தன் தோள்ப் பையில் அடைத்து வைத்திருந்தான், குமார் இன்னோவா காரினை கண்ணாடி போலே துடைத்து காத்திருந்தான் பாண்டியன் விமான நிலையம் அதில் தான் போக வேண்டும் இது பாண்டியன் இரவு குமாருக்கு சொன்னது சரியாக பத்து மணிக்கு தன் பல்சரில் வந்திறங்கினான் நம்மள சிக்கிரம் வர சொல்லிட்டு இந்தாளு எப்போ வாரான் என்று உள்ளுக்குள் முனங்கிக் கொண்டே அண்ணே டூர் ஐட்னேரி ஹோட்டல் லிஸ்டு எல்லாம் ரெடி பண்ணிட்டேன் திருச்சில மட்டும் ரெண்டு ரூம் பிரச்சனை இருக்கு அத மட்டும் சரி பண்ணிட்டு எனக்கு தகவல் சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே இருவரும் வண்டியில் ஏற குமார் கிண்டி நோக்கி வண்டியை செலுத்தினான்.
கிண்டி விமான நிலையம் புதுபிக்க பணிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது குமார் வாகன காபகத்தில் நிறுத்தினான்.டேய் குமாரு பின்னாடி சீட்ல ஒரு பொக்கே கவர்குள்ள மாலையும் இருக்கும் எடுடே சேகரு பெயர் எழுதிருந்த அட்டையை கையில் எடுத்து கொண்டு வரவேற்ப்பு வாசல் நோக்கி பாண்டியனும் சேகரும் நடக்க குமார் வண்டி சரியாக முடியிருகிறதா என்று மூன்று முறை பார்த்துவிட்டு பின்னாடியே ஓட்டமும் நடயுமாக அவர்களை நெருங்கி நடந்தான் விமான பலகையில் மலேசியா விமானம் தரை இறங்கி விட்டது என்று வந்தது சேகரின் தொலைபேசி ஒலித்தது எதிர்முனையில் சுற்றுலா செல்ல வர சொல்லியிருந்த 14+1 பேருந்து ஓட்டுனர் சார் பார்கிங் கிடைக்கல நா அந்த கடைசி தொங்கல நிருத்திருகேன் வண்டிய B செக்சன்ல நிக்கிது சரி அண்ணே அங்கே இருங்க வந்திருதேன் அண்ணே வண்டி பார்கிங் இல்லாம கடைசில நிக்குதாம் அய்யோ சேகரு நீ போய் பக்கத்துல கொண்டுவரமுடியுமா பாரு டே கையில் வைத்திருந்த பெயர் அட்டையை குமாரிடம் கொடுத்துவிட்டு ஓடினான் சேகர்,அலைபேசியில் கடைசி அழைப்பை அழுத்தி காதில் வைத்தான் சொல்லுங்க சார் அண்ணே வண்டி கலர் என்ன? வெள்ள சார்!வண்டி நம்பர் சொல்லுங்க PY – 01 – am -2563 சார் ஆஆ ஆ ஆ ........பாத்துட்டேன் அண்ணே வலது பக்கம் பாருங்க ஒரு வெள்ள சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் போட்ருக்கேன் பாத்துட்டேன் சார் இந்தா வரேன் அண்ணே வணக்கம் என் பேரு சேகரு நானும் உங்க கூடதான் வரபோறேன் மகிழ்ச்சி சார் சார்லா வேண்டாம் அண்ணே சேகரனே குப்டுங்க உங்க பேரு என்ன அண்ணே மாரி அவன் கிளி டேவிட் வணக்கம் டேவிட் அண்ணே சரி கொஞ்சம் முன்ன வர முடியாத அண்ணே வாய்ப்பில சார் செக்யூரிட்டி விட மாண்டன்,வண்டிக்குள் ஏறி நோட்டம்விட்டான் சேகர் பேருந்தின் உள்ளேயும் வெள்ளையாக பளிச் என்று இருந்தது இருக்கைகள் பயணிகளுக்கு தனி அறைபோல கதவு போடபட்டிருந்தது முன் இருக்கை பக்கம் ஒரு ஒலிவாங்கி (மைக்) தொங்கியது மேலே வண்ண வண்ண நிறத்தில் நட்சத்திரம் எதோ ஒன்று குறைவது போலவே உணர்ந்தான் ஆஆஆஆஆ... டிவி இருக்கும் இடத்தில் அவர்கள் கம்பெனி விளம்பரம் இருந்தது அவன் நினைத்த ஒன்று இப்போது இல்லை அண்ணே டிவி இல்லையா அண்ணே இல்ல சார் இது வெள்ளைகாரங்க டூர் வரபோ கொண்டு போற வண்டி அவங்க டிவி பாக்கமான்ட்டாங்க அவங்க எப்பவும் கண்ணாடிவழி வெளிய ரசிப்பாங்க (நம்ம ஆளுக சுற்றுலா போனாலும் டிவி தான் பாப்பாங்க )அவன் மனதில் பக் என்றது டிவி இருந்தாலாவது அதை ஓடவிட்டு தப்பித்து விடலாம் என்று நினைத்திருந்தான் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து,சரி என்ன செய்வது என யோசித்து கொண்டே வரவேற்ப்பு இடம் நோக்கி நடந்தான் பாண்டியன் ஒருவருக்கு மாலை அணிவித்து கொண்டிருந்தான் மலேசியா ஆட்கள் வந்திருந்தனர் மொத்தம் ஒன்பது பெண்கள் ஐந்து ஆண்கள் இரண்டு சிறுவர்கள் அதில் ஐம்பதை கடந்த பெண்கள் மற்றும் இரண்டு இளம் ஜோடிகள்,டேய் சேகரு எங்கடா வண்டி என்று வலது கையால் செய்கை காண்பித்தான் பாண்டியன் என்ன செய்ய போகிறோம் என்று யோசித்து நின்றுகொண்டிருந்த சேகர் கவனிக்கவில்லை டேய் சேகரு... என்று திரும்பவும் குமார் ஓடி வந்து ஏய் வண்டி எங்கல என்று கேட்கவும் சுதாரித்து கொண்ட சேகர் அண்ணே பார்கிங் பிரச்சனை வாங்க பக்கத்தில தான் வண்டி நிக்குது என்று அனைவருக்கும் கைகள் கும்பிட்டு வணக்கம் கூறிநான் சேகர்,இவர் தான் சேகர் உங்க இந்த டுரோட கைடு என்று அறிமுகபடிதினான் பாண்டியன் உள்ளுக்குள் உச்ச கோவத்தில் பாண்டியனை திட்டினான் சேகர்,வாங்க வண்டி இங்க கொண்டுவர முடியல அப்படியே ஒரு நாலு எட்டு வச்சா வண்டி அங்கதான் இருக்கு அந்த கூட்டத்தில் முருகன் தான் முக்கியமானவன் இந்த பயணத்தை ஒழுங்கு செய்தது அவர்தான் சரி என்று பேருந்தின் பக்கம் வந்தார்கள் அனைவரும் புன்னகை முகத்தோடு தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு வெறும் குனிந்து மண்ணிற்கு முத்தம் கொடுத்தனர் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் அமைதியானார்கள் மண்ணை பிரிந்தவர்களுக்கு தான் அந்த மண்ணின் பெருமை புரியும் என்பது சரிதானோ என்று நினைத்து கொண்டான் சேகர் இரண்டு நிமிடம் விமான நிலையத்தில் அவர்களை கடந்தவர்கள் அத்தனை பேரையும் ஒரு கணம் திரும்பி பார்க்க செய்துவிட்டு பாண்டியன் நெகிழ்ச்சியல் உறைந்திருந்தான் இந்த மண்ணை காண எதனை நாள் ஏக்கம் தெரியுமா பாண்டி அண்ணே என்றார் முருகன் அதிர்ச்சியில் உறைந்திருந்த பாண்டியன் புன்னகை போங்க அருமை சார் என்றார் பேருந்து நோக்கி நடந்தார்கள் தமிழ் மண்ணை அவர்கள் கால்கள் தொடுவது இதுதான் முதல் முறை அவர்கள் பூர்விகம் எல்லாம் திருச்சி பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் தான் அவர்கள் குடும்பம் தேயிலை தோட்டத்து வேலைக்கு போய் மூன்று தலைமுறை முடிந்துவிட்டது அவர் அம்மா லட்சுமி சாகுரதுக்குள்ள தமிழ்நாடுக்கு போகணும்னு ஆச அதனால தான் இந்த சுற்றுலாவ செய்திருக்கிறார் முருகன் வந்திருக்கும் அனைவரும் ஒரே குடும்பத்து ஆட்கள்தான்.பாண்டியன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார் பேருந்தின் கிளி டேவிட் பயணிகளின் பெட்டி எல்லாம் பேருந்தின் அடியில் அமைக்கப்பட்ட சாமான்கள் வைக்கும் அறையில் அடுக்கிக் கொண்டிருதான்.அருகில் சேகரின் மனம் யோசிப்பதை நிறுத்தவில்லை இந்த மண்ணின் மேல் எவ்வளவு பாசம் இவர்களுக்கு எப்படி ஒவ்வொரு ஊரில் உள்ள பெருமைகளை சொல்ல போறேனோ என்ற குழப்பத்தில் நின்றான் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நமக்கு சவாலான தருணம் ஒன்று அமையும் அதை எப்படி எதிர்கொள்ளபோகிறோம் என்பதே நமக்கு வாழ்க்கை தரும் மதிப்பெண்.
(பயணம் தொடரும்....)