தாய் மாமனே
தாயினும் மேலானவரே
நான் உதித்த பொழுது தான் பெற்ற குழந்தையாய் எண்ணி உவகை புரிந்தவரே
எனக்கு தோள் தட்டியவர் நீ தான்
ஊரே எதிர்த்தாலும் உனக்கு பக்கபலம் நானென்று வந்தவரே
எனது துன்பத்தில் பங்கு கொள்ள யாருமில்லை ஆனால் நீ பங்கு கொண்டாய்.
உறவென்ன என்று அறியாத பொழுது தாய்மாமனும் தாயென்று கருதிட வழிவகுத்தாய்.
எனக்கு குடிசை கட்டுகையிலே எனக்கு தான் உரிமை என்று சீர் செய்து சென்றாய்.
பணமில்லை காது குத்தவும் மொட்டை போடவும் தன் குருதியையும் காசாக்கி சீர் செய்தாய்
என் எங்கு இருந்தாலும் எனக்காக கவலை கொள்ளும் உறவும் நீதானே.
வாழ்த்தும் பந்தமும் நீ தானே.
ஒவ்வொரு நொடியும் நினைக்க மறந்ததில்லை.
எனை குணத்தில் தாய்மாமனை போன்றவளென்பார்கள்.
பூரித்து போவேன்.
சிறு வயதில் நீ வீட்டிற்கு வரும் பொழுது வரும் மகிழ்ச்சி
இன்றும் சிறுபிள்ளையாய்..
மாமனே உம்மைக்கண்டால் எல்லா துன்பங்களும் பறந்து விடும்.
உவகை எங்கிருந்தோ வந்து மனதில் ஒட்டிக்கொள்ளும்.
என் ஒவ்வொரு அடிக்கும்
செங்கல் நீ தான்.
ஊக்க மருந்தும் நீ தான் .
வயலின் அருமை உணர்த்தியவனும் நீ தான்.
எனக்காக எதையும் செய்வாய்.
என்னை எல்லாம் ஏசுகையிலே நீ மட்டும் ஒரு நாள் கூட திட்டியதில்லை.
உனக்கென்று குழந்தைகள் இருந்தும் என்னை இன்னும் உன் குழந்தையாய் பாவிக்கின்றாய்.
என் மாமனே இத்தனை அன்பிற்கும் என்ன தவம் செய்தேனோ
என்னிடம் நீ எதுவும் எதிர்பார்த்ததில்லை ஆனால் நான் என்றும் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்.
இந்த அன்பு எப்பொழுதும் வேண்டும்.
தாய்மாமனே தாய்மாமனே