வாழ்க்கை

உன்னை நீயே சமாதானப்படுத்திக் காெள்
அவசியமான தேவை இது
நேற்று நடந்தது
இன்று நடப்பது
நாளை நடக்காது
இது தான் நிஜம்

என்றும் ஒரே மாதிரி வாழவும் முடியாது
எதையும் எதிர் காெள்ள தயாராகு
இன்று பிரியலாம்
நாளை சேரலாம்
எதுவும் நிரந்தரமல்ல

மனதை திடப்படுத்து மரணம் வாசலில்
எப்பாேதும் காத்திருக்கும்
இன்றாே நாளையாே
நானாே நீயாே
விதிப்படி விடை பெறலாம்

கையில் என்ன காெண்டு வந்தாேம்
காெண்டு செல்ல
வாழத்தான் பிறந்தாேம்
அது வரை வாழலாம் வா....

எழுதியவர் : அபி றாெஸ்னி (4-Mar-18, 7:46 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 387

மேலே