மாடியில் அலையும் பூனைக்கு

எனது பாவங்கள்
அளவற்றவை
மாநகர் குப்பை போல்.
திருடிய பணங்கள்
அஞ்சாத பொய்கள்
மயக்கிய பெண்கள்
வலுச்சண்டைகள்
குழிபறித்த கொக்கரிப்பு
தோழற்க்கு துரோகம்
இன்னும் இல்லை
கொலைகள் என்பது
என்றாலும்...
மனங்களை கொன்றவன்.
குற்றங்கள் யாவும்
எரிபடும் என் பாடலில்...
கொட்டும் கொடுக்காய்
குற்றவுணர்வில் அவை
கருகி வழிகின்றன...
ஆறாத புண்களுடன்
பாடலில் ஒருக்களிக்கும்
உயிருக்குள் திணரும்
மீளாப் பிணமாய்
நான் துவள்கிறேன்
என்பதைச் சொல்வதற்கு
நீயாவது நின்று கேள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Mar-18, 5:54 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 70

மேலே