வானம்

நீலப்பட்டு விரித்து செந்நிற தரையிலே
கதிரவனைப் பிரசவிப்பாள்
வான்மகள்

செக்கல் பாெழுதுதனில் மறைவிடம் நகர்ந்து
மஞ்சளும் சிவப்புமாய் படுக்கை விரிப்பாள்
வான் மகள்

நீல வானில் வெண்முகில் அழகில்
பல காேடி நட்சத்திரங்கள் சிரிக்க
தனியே ஒரு வெண்ணிலவின் வெண்மையில்
அழகாெளிர்வாள் வான் மகள்

கருமுகில் உரசி மாேதி இடியாக
கண்ணைப் பறிக்கும் மின்னலாேடு
கடல் நீரைச் சுருட்டி வைத்து
கண்ணீர் வடிப்பாள் வான் மகள்

வான் மகளே நீ எத்தனை அழகம்மா

எழுதியவர் : அபி றாெஸ்னி (4-Mar-18, 5:26 pm)
Tanglish : vaanam
பார்வை : 101

மேலே