பொன்னடியே எனக்கினி கதி

உன் அழகில் மயங்கி
உன் காலடியே கதி
என்று இருந்துவிட்டேன்
என்னிடம் கொடுப்பதற்கு
இனி ஏதும் இல்லை என்றறிந்து
என்னை விட்டு நீயோ பிரிந்துவிட்டாய்
இனி 'அவன்' பாதமே' கதி என்றிருக்க
இப்பிரிவில் எனக்கு 'நீயும்'
ஓர் பாடம் புகட்டி சென்றாயோ
அதற்கோர் நன்றி உனக்கு
தீமையிலும் 'அவன்' எனக்கோர்
நன்மைக்காட்டி என்னை ஏற்றுவைத்தான்
அவன் பொன்னடியே எனக்கினி கதி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Mar-18, 8:35 am)
பார்வை : 69

மேலே