திருடத் தெரிந்தவனுக்கு

தேடி எடுத்துவந்து
தேனைச் சேமிக்கத் தெரிகிறது,
தேனீக்கு..

கொடுக்கும் இடைஞ்சலுக்குக்
கொட்டி விரட்டிட
கொடுக்கிருக்கிறது அதனிடம்..

அதனையும் மீறி,
தேனைத் திருடிடத்
திறமை இருக்கிறது-
மனிதனிடம்..

கலங்குவதில்லை தேனீ,
தெரியும் அதற்கு-
திருடத்தெரிந்த மனிதனுக்குத்
தெரியாது-
தேனை உருவாக்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-18, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே