நீ உறங்கிக் கிடந்தால்

சேவல் கூவாவிட்டால்
விடியாமல் போவதில்லை !
பெண்கள் பூ சூடாவிட்டால்
பூக்கள் மலராமல் போவதில்லை !
நீ நீராடாவிட்டால்
நதிகள் பாயாமல் போவதில்லை !
இயற்கை தன் நியதியில்
சுழலும் வாழும் !
நீ உறங்கிக் கிடந்தால்
உனக்கும் உன் ஊருக்கும் உன் நாட்டிற்கும்
விடிகாலம் இல்லை !