நச்சு அரவம்
செய்யும் பாவங்களை
கழட்டி வைத்துவிட்டு
மனசாட்சி என்று ஏதுமில்லாமல்
நல்லவர்போல் மேடையில்
பாமரரை மயக்கி பேசி
'வோட்டு' வாங்கும் துரோகிகள்
சட்டையை விரித்துவிட்டு
ஓடித்திரியும் நச்சு அரவம் ஒப்பர்