கன்னத்தில் முத்தமிட்டான்

களங்கமில்லா நிலா
அவன் முகம்
ஒரே இடத்தில் வட்டமிடும் வண்டுகள்
அவன் கண்கள்
சிவந்த சிப்பி
அவன் உதடு
தேன்குழல் கீதம்
அவன் பேச்சு
பார்த்து கொண்டே இருக்க தூண்டும்
அவன் சிரிப்பு
கடற்கரையில் பௌர்ணமி போல்
அவன் வனப்பு
ரசித்து கொண்டிருக்கும் போது
ஓடி வந்து அணைத்து
கன்னத்தில் முத்தமிட்டான்
என் மகன் !!!

எழுதியவர் : (7-Mar-18, 5:07 pm)
பார்வை : 101

மேலே