காதல் ஒரு நதி ஓடம் விடலாம்

காதல் ஒரு கானல் நீர் என்றான் ஞானி
காதல் ஒரு நதி ஓடம் விடலாம் என்றான் இளைஞன்
ஓடம் கவிழ்ந்துவிடும் என்றான் ஞானி
கவிழ்ந்தாலும் காதல் நதியில் நீந்தலாம் என்றான் இளைஞன்
நீந்திக் கடைத்தேறுவது என்று என்றான் ஞானி
நீந்திக் கடைத்தேறினால் ஞானி
நீந்திக்கொண்டே இருந்தால் போகி என்றான் இளைஞன்
சர்தான் என்று விடை பெற்றான் காவி !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-18, 5:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 220

மேலே