தூங்காத என் விழிகள்
உன் விழிகளை
நேரில் கண்டிட வேண்டும்
உன் விழியின் தாக்கத்தில்
நான் கிறங்கி நிற்க வேண்டும்
உன் விழிப்பார்வை வெளிச்சம்
தாங்காமல் விழிதாழ்த்திட வேண்டும்
உன் விழிப்பார்வையை மீண்டும்
கண்டிட ஏங்கி முகம் உயர்த்திட வேண்டும்
உன் விழிப்பார்வைகளும்
என் விழிப்பார்வைகளும்
இரு சிறுகுழந்தைகளாய்
கண்ணாமுச்சி விளையாடி
காலம் முழுக்க கண்கள் இனிக்க
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்
உதடுகள் எல்லாம்
ஓரம் போய்விடுங்களென்று
உரைத்துவிட்டு நம்மிருவர்
கண்கள் மட்டும்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும்
உன் விழியும் என் விழியும்
சந்திக்கும் நேர்கோட்டில்
எனக்குள் பிரசவிக்கும்
லகுளிர் அருவி சத்தத்துக்கும்
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கும்
நிலவு துண்டுகளுக்கும்
மின்னல் வெளிச்சத்துக்கும்
என்னும் என்னென்ன
சுகங்கள் நிகழுமோ
அந்த உணர்ச்சி
பிரபாலங்கள் எல்லாம்
எப்படி இருக்கும்
என்று கண்டுணர
வேண்டும் ஒருநாள்
இந்த கைபேசி
இந்த மின்னஞ்சல்
இந்த குறுஞ்செய்தி
எல்லாம் நிறுத்திவிட்டு
உனக்கும் எனக்குமான
தூரங்களை அழித்துவிட்டு
இந்த இடைவெளியை
இல்லாமல் செய்துவிட்டு
என் எதிரில் வந்து
நின்று என்னை
பிரமித்திட செய்வாயோ
உன் விழியும்
என் விழியும்
சந்தித்திடும் அந்த
முதல் நொடிக்காக
காத்தபடி திறந்தே
கிடக்கிறது தூங்காத
என் விழிகள்