பெண்கள் நாட்டின் கண்கள்

கிழக்கே சூரியன்
உதிக்க மறுப்பதும்
பெண்கள் மனையில்
அடைந்து கிடப்பதும்
ஒன்றுதான்
உலகமே இருளில்
ஆழ்ந்துவிடும்
உணர்ந்து செயல்படுவோம்...

நிலவுடன் ஒப்பிடுவதால் மட்டுமே
பெண்ணானவள்...
சமூகநீதியை வென்றிடமுடியுமா???
இல்லையே...
இன்றளவும் அவளது
இன்பங்கள் தேய்பிறையாகவே
இருக்கிறது
துன்பங்களே வளர்பிறையாய்
நிறைகிறது
புரிந்து செயல்படுவோம்...

பெண் என்பவள்
குழந்தைகள் உற்பத்திக்கும்
எந்திரமல்ல...
உணர்வுகள் நிறைந்த
மானுடம் அவள்
வளர்ச்சிக்கான தடைகளல்ல...
முன்னேற்றத்திற்கான ஆயுதம்
அவள்
அறிந்து செயல்படுவோம்


இப்படியாக இதுவரையில்...
பாரதி காட்டிய வழிகளில்
பாதி மாற்றங்களை தானே
பெண் கண்டுள்ளாள்
இனி...
மீதி மாற்றங்களும் கொண்டு வருவோம்!
இம்மகளிர் தின நன்னாளன்று
சபதம் ஏற்போம்...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (7-Mar-18, 7:57 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 207

மேலே