கண்ணகியும் காவிரியும்

காவிரிக்கரையில் கவிதைகள்தேடி கழுகாய்நானும் பறந்தநேரம்
காவியத்தலைவி கவிமொழிய எழுதிடமறந்த துறவியானேன்...

தணல்பொங்கும் மணல்சுவட்டில் கணவன்கதை கணநேரம்
சணல்போல திணரவேண்டும் பிணவாடை உணரவேண்டும்...

குறுவைநெல் அறுவடைசெய்ய தறுவியவன் இறுதியடைந்தான்
மறுவேலை உறுபசிக்கு வேறுவழி உறுதியுண்டா...?

செங்குருதி பாய்ந்தோடும் அங்கமதில் பஞ்சம்புக
மங்கையிவள் வாய்திறந்து மங்குமொழி மிஞ்சியழ...

கேட்டசெவி கரைந்துபோக சுட்டமணல் சுடுகாடாகும்
ஏட்டிலேறா திரைக்கதைகள் நாட்டிலெங்கும் இடுபொருளாய்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (7-Mar-18, 8:11 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 91

மேலே