பெண்ணே உனக்காக -2 புதுமைப்பெண்கள்

பெண்மை!
தலைகீழாய் எரியும் தீப்பந்தம்!
உயர் நற்பண்புகள் தான் உன் சொந்தம்!!
பாரதி கண்ட கனவுப்பெண்ணே!
என் தேசம் போற்றும் குலப்பெண்ணே!!
ஏச்சுக்களும், பேச்சுக்களும்
எத்தனை ! எத்தனை!!
உன் முன்னேற மூச்சை நிறுத்தவே அத்தனை! அத்தனை!!
சாமி எங்கே?! பூதம் எங்கே? !
சேட்டிலைட் தேடுவாள்! தேடுவாள்!
பகுத்தறிவு சிந்தனை மிக்கவள்! மிக்கவள்!!
பழமை பேசுபவரை புறம் தள்ளுவாள்! தள்ளுவாள்!!
சாத்திரமும், தேவை இல்லை! சாதியும் தேவை இல்லை !!
உயர் சூத்திரம் ஒன்றே என் சுயமரியாதை! என்பாளாம்!! என்பாளாம்!!
கம்ப்யூட்டர் உலகம் அல்லவோ அழகாய் பிறப்பாள்!
அறிவில் சிறப்பாள்!!
தன்னை சீண்ட நினைத்து தொட்டால் வெடிப்பாள்! வெடிப்பாள்!!
மிளிர்வதும், ஒளிர்வது, பெண்மையே ! பெண்மையே!!
அதற்காக தன் உணர்வுகள் உருக்குவாள் என்பதும்
உண்மையே! உண்மையே!!
உன் வீட்டிலேயே தேடிப்பார் அன்னையாக!
மனைவியாக!!
தங்கையாக!!!
மகளாக !!!
மிளிர்கிறதே பெண்மை!
வாழ்க பெண்மை!!