எப்படி கடப்பேன்

எப்படி கடப்பேனடி
நீயில்லாத இந்த நாட்களை!
கடந்துபோகும்
ஒவ்வொரு நொடியும்
என் உயிரின்
ஒவ்வொரு பாகத்தை
எடுத்துச் செல்கிறது!
உயிர் மிச்சமிருப்பின்
தட்டுத் தடுமாறி
உன்னை வந்து சந்திக்கிறேன்
என் உயிரை புதுப்பித்துக்கொள்ள!

எழுதியவர் : நகுலன் (8-Mar-18, 5:34 pm)
Tanglish : yeppati kadappen
பார்வை : 150

மேலே