உதாரணமாய்
குயிலதன் முட்டையும் சேர்த்தேதான்
கூட்டில் வைத்தே அடைகாக்கும்,
பயில வில்லைப் பண்பிதனைப்
பள்ளி யெதிலும் சேர்ந்தேதான்,
செயலில் ஒற்றுமை காட்டுமினம்
சேயைப் பேணிடும் சிறப்பைப்பார்,
உயர்ந்த தாய்மைச் சிறப்பினுக்கே
உதாரணம் என்றும் காக்கையாமே...!