ஒளிந்துவிடு
இன்று
ஒளிந்து விடு...
அடியே வேகமாக ஒளிந்துவிடு
என்கண் முன்னே நிற்காதே-என்னை
காப்பாற்ற எனக்காக செய்துவிடு.
உள்ளிருக்கும் இருதயம் வெளிவர
துடிக்கிறது என்னை கொன்றாவது-உன்னை
கண்டுவிட அது நினைக்கிறது.
ஓடும் இரத்த நாளமது
நிற்கிறது உடல்துளையின்
வழியே - உன்னை
எட்டி நின்று பார்க்கிறது.
கால்களும் என்னை சிறையே
செய்கிறது நீநகரும் வரையில்-என்னை
நிற்க வைத்து ரசிக்கிறது.
மூச்சுக்காற்றும் உள்வர தாமதம்
ஆகிறது நீயருகில் உள்ளவரை - உனக்கே
பணியென அறிக்கை விடுகிறது.
கண்களும் உன்னை கண்டபடி
பார்க்கிறது இதுவரை நான்காத்த-கற்பை
கண்ணாலே இழக்க வைக்கிறது.
கண்ணிமையும் எனக்கு எதிராய்
நிற்கிறது உறக்கத்தை நீக்கி-உன்னை
ரசிப்பதில் பணியை தொடர்கிறது.
மூளையும் கூட நடிகனாய்
ஆகிறது உன்னை உயிரென-என்னிடம்
காதல் செய்ய கெஞ்சுகிறது.
உடலின் வெப்பம் சூரியனை
மிஞ்சுகிறது அதுவும் மீண்டும்-உன்னால்
வியர்வையால் என்னை மூழ்கடிக்கிறது.
என்னுடலே என்னைவிட்டு வேறாக
ஆகிறது இருப்பதிரெண்டு வயதாய்-உனக்கே
காத்திருந்ததாய் பாடம் எடுக்கிறது.
போதும் போதும்...
வேகமாக ஒளிந்துவிடு...
இதற்கு மேல் தாமதித்தால்
உன் கண்களால் கல்லாகிய எனது சாபம்
உனக்கு வந்துவிடும்...
உனக்கே சாபம் கொடுத்தமைக்கு
என் மனதே என்னை உயிரோடு கொஞ்சுவிடும்...
போதும் போதும்
அத்தனையும் போதும்...
நானாக உன்னை விலகும்
வாய்ப்பை இழந்துவிட்டேன்...
இது மன்னர் காலமாக இருந்திருந்தால் நீ எந்நாட்டு அரசியானாலும்
உன்னை வென்றெடுத்து அடைந்திப்பேன்.
நேரமும் காலமும் சதிசெய்துவிட்டது...
அழகினில் அகிம்சையில் போர் செய்யும் தீவிரவாதியுன்னை
இந்த கவிஞனும்
அடைவது கடினமே...
தயவு செய்து ஒளிந்துவிடு...
இல்லை விலகிவிடு...
உன் காலிலே
ஒரு பக்கம்
உன்னை உயிரென காதல் கடிதமும்...
மறுபக்கம் உயிரை காப்பாற்றென
வேண்டுதல்
கடிதமும்...
வைக்கிறேன்...
என்னைக் காப்பாற்று நீ விலகினால் உயிர் பிழைப்பேன் ஒரு போதும்
உனைமறக்கமாட்டேன்...
என்னைக் கரம்பிடித்தால் கைதியாவேன் ஆயுளும்
உன் உள்ளமே போதும் நான் வாழ என்றென்றும்...
நீ
கிடைத்தாலும்...
இல்லை நீ...
மறைந்தாலும்...
நீ
பிறந்த
இம்மண்ணை(அவள் பிறந்த ஊர்)
சொர்க்கத்தின் திறவுகோளாக...
எழுதியே வைத்துவிடுகிறேன்...
காதலெனும் ஆயுதத்தால் அகிம்சையில் வென்றமையால்...
என்றும் அன்புடன்...
✍🏻 நெய்தல் தமிழன்
இருதய ஆஸ்ட்ரோ.த