தமிழ்க் காலா - இந்திக் காலா

அடேய் காலா, இங்க வாடா. என்ன எத்தன நாளைக்குடா சோதிக்கிற?
😊😊😊😊
யோவ் பெருசு* என்னோட அபிமான நடிகர் ரஜினி. அவுருதான் இப்ப காலா. நீ எப்பிடி 'அடேய் காலா' -ன்னு கூப்பிட்டு என்னோட இதய தெய்வத்தை இழிவுபடுத்தலாம். இன்னைக்கோ நாளைக்கோ-ன்னு படுக்கையில கெடக்கிற. உங் குசும்புத்தனம் போகலியா.
😊😊😊😊😊
யாருடப்பா அந்த ரசினி? அவருக்கும் எமனுக்கும் என்னடாப்பா சம்பந்தம்?
😊😊😊😊😊
என் இதய தெய்வம் ரஜினியத் தெரியாம இத்தனை வருசம் நீ உயிர் வாழ்ந்திட்டு இருக்கற! ஏய்யா பெருசு எந் தலைவரு எமனுக்கே சவால்விடற ஆன்மீகவாதி. அவரை எமனோட சம்பந்தப்படுத்திப் பேசறயா?
😊😊😊😊😊
அடேயப்பா அந்த ரசினி யாருன்னு சொல்லுடா.
😊😊😊😊😊
அவுரு சூப்பர் ஸ்டார்.
😊😊😊😊😊
எனக்கு சூப்பற இசுடாரு சூப்பாத இசுடாரப்பத்தியெல்லாம் என்னென்னே தெரியாதுடாயப்பா.
😊😊😊😊😊
ஏம் பெருசு நீ சினிமாப் பாத்ததில்ல.
😊😊😊😊😊
எனக்குத் தொண்ணூத்தெட்டு வயசு ஆகுது. நாம் பொறந்ததில இருந்து அந்தக் கருமாந்தரம் எல்லாம் பாத்ததில்லடாயப்பா.
😊😊😊😊😊
பெருசு நீயெல்லாம் சினிமா பாக்காம இத்தனை வருசம் வாழ்ந்ததே தப்பு.
😊😊😊😊😊
அதுக்குத்தான்டா "காலா இங்க வாடா" கூப்புட்டேன்.
😊😊😊😊😊
பெருசு மறுபடியும் என் இதய தெய்வத்தை அவமதிக்கிற!
😊😊😊😊😊
சரிடாயப்பா. நீ வேலைல இருக்கறயா?
😊😊😊😊😊
இல்ல பெருசு நான் வேலையில்லா முதுகலைப் பட்டதாரி.
😊😊😊😊😊
எந்தப் பாடத்தில முதுகலைப் பட்டம் வாங்கின.
😊😊😊😊😊
தமிழ் இலக்கியம்.
😊😊😊😊😊
நான் அந்தக் காலத்தில ரண்டாம் வகுப்பு படிச்சவன். தப்பு இல்லாம தமிழில எழுதுவேன். "நாங் அடேய் காலா-ன்னு' கூப்பட்டதுக்கு கோவிச்சிட்டயே இப்பச் சொல்லு. 'காலா'-ன்னா என்ன?
😊😊😊😊😊😊
என்ன பெருசு எனக்கு இதுகூடவா தெரியாது. எந் தலைவரே சொல்லிட்டாரு. 'காலா'ன்னா 'கருப்பு'.
😊😊😊😊
ஏன்டப்பா உந் தலைவரு இந்திப் பேராசிரியா இல்ல தமிழ்ப் பேராசிரியரா?
😊😊😊😊
அவுரு சூப்பர் ஸ்டார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.
😊😊😊😊😊
இந்திலதான்டா 'காலா'-ன்னா 'கருப்பு' -ன்னு அர்த்தம். பெருந்தலைவர் காமராசர இந்தில 'காலா'-காந்தி-ன்னுதான் சொல்லுவங்க. உன்னோட ரசினி என்ன இந்திக்காரரா?
😊😊😊😊😊
அவுரு மராட்டிய மண்ணின் மைந்தர்**. கர்நாடகாவில வளர்ந்தாரு. தமிழ் நாட்டுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆகிட்டாரு.
😊😊😊😊😊
எந்த இசுட்டாரவோ அவுரு இருக்கட்டும். நீ தமிழ்ல முதுகலைப் பட்டம் வாங்கினவன். 'காலன்'ங்கற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா?
😊😊😊😊😊
எனக்கு 'காலா' -தான் தெரியும் . 'காலன்' -னெல்லாம் தெரியாது.
😊😊😊😊😊
ரண்டாம் வகுப்பு படிச்ச நாஞ் சொல்லறேன் கேட்டுக்க. 'காலன்' -னா எமன். நான் ரண்டு வருசமா படுக்கையில கெடக்கிறேன். 'வேலன்' -னு பேருள்ள பையனை 'வேலா' -ன்னு கூப்படறமாதிரி காலனை 'காலா' -ன்னு கூப்புட்டேன். எத்தனை நாளைக்கு படுக்கையிலே காலத்தைக் கழிக்கிறது. என்னோட உயிரை எடுத்துக்கச் சொல்லித்தான்டா காலனை "காலா' -ன்னு கூப்புட்டேன். இப்பத் தெரியுதா நீயேன் வேலையில்லா முதுகலைப் பட்டதாரியா இருக்கிறன்னு?
😊😊😊😊😊
?????????°
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆
*முதியவர்களை இழிவுப்படுத்த திரையாளிகள் கண்டுபிடித்து உலகம் முழுவதும் பரப்பிய சொல் 'பெருசு.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆
**பல மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு ரஜினியின் பெற்றோர் அவருக்கு வைத்த சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரைக் குறிப்பிட்டு, "மராட்டிய மண்ணின் மைந்தரான ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்குப் பிழைக்கச் சென்று கோடிக்கணக்கான ரசிகர்களின் போற்றுதலுக்குரியவராக உள்ளார். அவருக்கு இந்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும்" என்று வலியுறுத்தியது.

எழுதியவர் : மலர் (11-Mar-18, 5:39 pm)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே