முதல் சந்திப்பு

வருவதாய்
சொன்னவளை
காணவில்லை..


கழிந்து
போகின்ற
நொடிகளில்..

எகிறி
வெளி
வர
துடிக்கும்
இதயத்தை
உள்ளடக்கி
காத்திரு
என்கிறேன்...

அவள்..

எத்தனையோ
பேரின்
முதல்
காதல்
அவள்..

அவளையன்றி
கவிதைகளும்
இல்லை,

அவளை
வர்ணிக்க
கவிஞனும்
இல்லை..


கண்டதும்
காதல்
கதைகளிலே
கேட்டிருக்கிறேன்..

அச்சுகம்
அறிந்தேன்
நேற்று

அவள்
ஸ்பரிசம்
கிட்டுகையில்!!!

அறியா கணத்திலே
அழகாய்
என்னை
தீண்டி
போனாள்
அவள்..

யாரென
திகைத்து

திரும்பி
நான்
நோக்குகையில்

ஏனோ

அவள்
எழில்
கண்டு,

நான்
கிறங்கித்தான்
போனேன்..மீண்டும்
மீண்டும்
அவள்
ஸ்பரிசம்
வேண்டும்
என

இதயம் கேக்க
அவளை
நோக்கிட

மின்னும்
விழிகள்
சிமிட்டி

மீண்டும்
வருவேன்
என,

தன்
சாரல்
துளிகளால்

எனக்கு
சேதி
சொல்லி
போனாள்

என்
மழைக்காதலி??!!!

அவள்
ஸ்பரிசம்
தந்த
மயக்கம்
தீராமல்
அவளுக்காக
காத்திருக்கிறேன்
நான்..

எழுதியவர் : (12-Mar-18, 9:59 am)
சேர்த்தது : கங்காதேவி
Tanglish : en muthal kathali
பார்வை : 114

மேலே