அகலத் திறந்து கொள்ளும் ஆலய வாசல்
ஆலயங்களை நீ மூடிவிட்டாலும்
ஆண்டவன் இல்லாமல் போகமாட்டான் !
மண்ணிலும் விண்ணிலும்
என்னிலும் உன்னிலும்
செடியிலும் கொடியிலும்
நதியிலும் அலையிலும்
மலையிலும் மடுவிலும்
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன்
நான் என்பான் !
என்னிலுமா எங்கே எங்கே என்ற
உன் தேடல் துவங்கிடும் போது
அந்த ஆலய வாசல் தானே உன்னுள்ளே
அகலத் திறந்து கொள்ளும் !