வஞ்சம் செய்வாரோடு
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::01-02-2018
நன்றி:: கூகிள் இமேஜ்
======================
வஞ்சம் செய்வாரோடு..!
======================
வஞ்சகிகூனியும் வஞ்சகசகுனியும் செய்ததாகப் பல..
.......தந்திரமதைச் சொல்கிறது ராமகாதையும் மாபாரதமும்.!
வஞ்சகத்திற் கெப்போது மிப்போதும் குறைவில்லை..
.......வாகாகயதைக் கையாளத் தெரிந்தால் துன்பமில்லை.!
பஞ்ச பாண்டவருக்கு துரோகமிழைத்த துரியோதனன்..
.......பாரதப்போரிலே படுதோல்வி யடைந்தது எதனாலே.!
அஞ்சாநெஞ்சம் கொண்ட சிங்கமாமந்த கர்ணனை..
.......ஆட்டிவைத்து அழவைத்ததும் வஞ்சச் செயல்தானே.!
லஞ்சமென்ப தெங்குமெதிலும் தலை விரித்தாடுமதில்..
.......லாவகமாய்ச் சதித்திட்டம் பலவுமங்கே அரங்கேறும்.!
கஞ்சியோ கூழோ நீராகாரமோ உண்டுவாழ்பவரைக்..
.......கூடவாழ்விலே கெடவைக்கும் செயலாகும் வஞ்சமாம்.!
பிஞ்சிலே பழுத்தகாதல் மஞ்சத்தில் முடியாதுபோவதும்..
.......பாஞ்சாலங்குறிச்சி மன்னனைத் தூக்கிலிட்டது மதுவே.!
கிஞ்சித்தும் யோசியாது வஞ்சம் செய்வோரவரே..
.......கொஞ்சமும் யோசிக்கார்!துரோகமெனவும் நினையார்.!
நெஞ்சத்தினிலே இதயத்தினிலே எத்துணை நாள்நாம்..
.......நீதியநீதியைப் பிரித்துப் பார்க்கக் காக்கவேண்டும்.!
வஞ்சகமில்லாத மனிதராகயினி மறுபிறப் பிலாவது..
.......வாழ சண்டாளர்துணை நீங்கயிறையருள் வேண்டும்.!
துஞ்சாத மனநிலையைத் தந்தருளயென் முன்வினைச்..
.......செய்ததீச்செயல் யாவுமகற்ற உன்துணை வேண்டும்.!
பஞ்சம்பசி பட்டினியின்றி நெஞ்சிற் கருணையொடு..
.......பாருலகைப் படைக்க உன்னைத் தஞ்சமடைகிறேன்.!
===================================================

