தமிழா தமிழா

தமிழன் என்பதை விட மனிதன் ஒற்றுமையாக இருக்க மனிதநேயம் எங்கும் பரவ வேண்டும்..!

நம் மொழியின் மீது நேசமும் பற்றும் கொண்டும் நாட்டு மக்களை நேசித்து சுயநலமில்லா அறிவுடன் செயல்படும் கூட்டத்தினால் தான் பசி,பிணி,பகை இல்லா நாடு உருவாகும்.அதன் மூலம் ஒரு நாடு மட்டுமல்ல இவ்வுலகையும் ஆளும் நாள் வரும்..!

தமிழ் தான் எம்மொழி என மார்தட்டி சொல்லும் காலம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இனம்,மொழி கடந்து தமிழில் தோன்றிய திருக்குறள் "உலகப்பொதுமறை" என்ற சிறப்பு போதாதா...
அதுமட்டுமின்றி கடந்த வருடம் தமிழ் மரபுகளைக் காக்க இளைஞர்களின் எழுச்சி கண்ட போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழினத்தின் உலகளாவிய பங்களிப்பு போதுமே..தமிழ் எம்மொழி என மார்தட்டி சொல்ல..!

எழுதியவர் : விக்னேஷ்வரன் (12-Mar-18, 12:07 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
பார்வை : 308

மேலே