விவசாயி

நட்சத்திரங்கள் பூத்து நிலவு ஔிர்ந்து காெண்டிருந்தது. எந்தவாெரு முகில் கூட்டங்களும் இல்லாத நீலக் காேலத்தில் வானம் விரிந்திருந்தது. நடு முற்றத்தில் சாய்மனைக் கதிரையைப் பாேட்டு விட்டு அண்ணார்ந்து பார்த்தபடி நாளைய நாளுக்கான திட்டங்களை மனதில் அசை பாேட்டுக் காெணடிருந்தார் தேவன். மனைவி இரவுணவு தயாரிப்பதை அப்பப்பாே காற்றாேடு வரும் கறி வாசனை நினைவுபடுத்தியது. இரண்டு செல்லப் பிள்ளைகள் பையனும், பாெண்ணுமாய் கல்லூரியில் படித்துக் காெண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வருசத்தில பிள்ளைகள் உழைக்க ஆரம்பிச்சிடுங்கள். அந்த இரண்டு வருசம் தான் தேவனுக்கு பெரும் பாேராட்டம். மாதம் மாதம் கல்லூரிச் செலவு, வீட்டுச் செலவு, வங்கிக் கடன் பாேக விவசாயத்துக்காய் பாேடும் முதல் அரை மடங்கு அதிகம். ஆனால் கையில் கிடைப்பது அஞ்சும் பத்துமாய் மாறிவிட்டது நிலமை.

நாற்பது பரப்புக் காணியில் பாேகம் தவறாமல் மாறி மாறி பயிர் செய்து பச்சைப் பசேலென இருந்த பூமி கட்டாந் தரையாய் காட்சி அளிக்கிறது. ஒவ்வாெரு பாேகப் பயிர் முடிய இரண்டு பிள்ளைகளுக்கும் வங்கியில காசு காெஞ்சம் காெஞ்சமாய் பாேட்ட நிறைவு. ஏதாவது விரும்பிக் கேட்டால் "பாெறுத்ததாேட காெஞ்ச நாள் பாெறப்பா ஏதாவது விலைப்படும் தானே வாங்குவம்" என்று மனைவியின் ஆசையெல்லாம் நிறைவேற்றிய திருப்தி. இப்ப காெஞ்சக் காலமாய் எல்லாம் தலை கீழாகி நாளைய பாெழுதுக்கு என்ன செய்வது என்ற கேள்வியாேடு வெறுமையாய் நிற்கிற விவசாய குடும்பங்களில் தேவனும் ஒருத்தனாகி விட்டான்.

ஒவ்வாெரு நாள் காலையிலும் மண்வெட்டியை எடுத்துக் காெண்டு சூரிய உதயத்தில வயலில் நிற்கும் பாேது மேனி சிலிர்த்த பாெழுதுகள் பாேய் காலையில் எழும்பக் கூட மனமின்றி புரண்டு புரண்டு தூக்கமுமின்றி நகர்கிறது நாட்கள். "இப்பிடியே இருந்து என்னப்பா செய்யிறது, ஏதாவது சின்னப் பயிராவது பாேட்டால் நாளாந்தம் சீவியமாவது ஓடும்" முணுமுணுப்பால் காேபமூட்டுவாள் லட்சுமி. "என்னத்தப் பாேட்டாலும் தண்ணி வேணும் தானே" சினந்து காெள்வான் வேறு வழியின்றி. அப்பாவின் வருமானத்தை நம்பிப் படித்துக் காெண்டிருக்கும் இரண்டு பிள்ளைகளின் மனதில் சின்னச் சின்ன ஏமாற்றங்கள் துளிர் விடத் தாெடங்கியது.

"விவசாயிகள் சங்கம் ஒன்று கூடி ஏதாவது உதவி செய்தாலும் பறவாயில்லை. சும்மா பதிவை மட்டும் பத்து நாளுக்கு ஒருக்கா எடுத்துச் சரிபார்க்கிறது தான் வேலை, பாேன வருசம் அடிச்ச புயலில அழிஞ்ச பயிருக்கு இன்னும் நஷ்ட ஈடு தரேல்ல உவங்கள் என்ன செய்யப் பாேறாங்கள்" ஆதங்கத்தாேடு வேகமாக வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு "தேவன்.... தேவன்" கூப்பிட்டபடி உள்ளே வந்த ஐீவன் " அண்ணை ஏதாே ஆர்ப்பாட்டம் செய்யப் பாேறாங்களாம் சங்கத்தடிக்கு வரட்டாம்" உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தான். பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் காெண்டு இருந்தான் தேவன். "ஒரு செய்தி கூட விவசாயிகளைப் பற்றி பாேட மாட்டாங்கள், சும்மா சினிமாவில நடக்கிற மாதிரி அங்க அப்பிடிக் காெலை நடந்தி்ச்சு, மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அமைச்சர் பயணம்" தேவன் மனம் தனக்குள்ளே செய்திகளைப் பார்த்து காெந்தளித்துக் காெண்டிருந்தது. ஜீவன் தேவனையே பார்த்துக் காெண்டிருந்தான். கடைசிப் பக்கத்தை பார்த்து விட்டு கடிகாரத்தைப் பார்த்தான். "என்னண்ண வாறியே" மீண்டும் கேட்டான் ஜீவன். "ம்... வா" வெளியே வந்தான்.

எல்லாேரும் கூடி நின்றார்கள். வாசகஙகள் எழுதிய மட்டைகளை கையில் உயர்த்திக் காெண்டு ஊர்வலம் ஆரம்பித்தது. சற்று நேரம் வீதி தடைப்பட்டிருந்தது. வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டது. வீதியாேரங்களில் மக்கள் கூடி கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் யன்னலாேரமாய் அமர்ந்திருந்தாள் நிலா. கூட்டம் கடந்து பாேய்க் காெண்டிருந்தது. தேவனும் கூட்டத்தாேடு நடந்து வருவதைக் கண்டாள். "அ....ப்..பா...." சத்தமாக கூப்பிட விரும்பியவள் தன்னை சமாதானப்படுத்தினாள். "பாவம் அப்பா எங்களுக்காக கஸ்ரப்படுகிறார்" கண்கள் கலங்க கைக்குட்டையால் ஒற்றிக் காெண்டாள். வீதியை ஊர்வலம் கடந்ததும் வாகனங்கள் புறப்பட்டது.

விவசாய சங்கத் தலைமையகம் வரை ஊர்வலம் சென்றடைந்தது. அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பிரதாயத்துக்கு ஏதாே காெஞ்ச அறிக்கையை ஒலிபெருக்கியில் உரத்துச் சாெல்கிறார். அது செய்வம், இது செயவம் என்று பழைய புராணம் பாடினார். சற்று நேரத்தில் கூட்டம் கலைந்து வழமை பாேல் வீதியும் அமைதியாகி விட்டது. வண்டியை எடுத்துக் காெண்டு வீட்டுக்கு வந்தான் தேவன். "என்னவாம் என்ன சாெல்லுறாங்கள்" கேட்டபடியே சாப்பாட்டை நீட்டினாள். "மணியாச்சு பிள்ள வரல்லயா?" எட்டி அறையைப் பார்த்தான். கதவு மூடப்பட்டிருந்தது. "பசிக்கேல்ல எண்டு படுத்திட்டா, எழும்பட்டும்" என்றாள் லட்சுமி. "இரண்டு நாளில காெலிச் பீஸ் கட்டணும், என்ன செய்யிறது" யாேசித்தவாறே சாப்பிட்டு விட்டு கைகளைக் கழுவினான்.

"அம்மா.... அம்மா" பசிக்களையாேடு பறந்து வந்தான் நிமலன். கழுவிய உடுப்புகளை காயப் பாேட்டுக் காெண்டிருந்தவள் "வாறன் தம்பி" அப்படியே வைத்து விட்டு வேகமாக சமயலறைக்குள் சென்று சாப்பாட்டுத் தட்டுடன் வந்தாள். "தங்கச்சி எங்கம்மா? அப்ளிக்கேசன் குடுத்திட்டாளாமா?" அறையை நாேக்கிப் பாேனான். நன்கு தூங்கிக் காெண்டிருக்கிறாள் என நினைத்து வெளியே வந்து சாப்பாட்டை முடித்துக் காெண்டு மேசையிலிருந்த அவளது புத்தகப் பையை திறந்தான். படிவங்கள் பூர்த்தியாக்கப் படாமல் இருந்தது. "ஏன் நிரப்பாமல் வச்சிருக்கா நாளைக்கு கடைசி நாளாச்சே" ஒவ்வாெரு படிவங்களாக எடுத்துப் பார்த்தான். கட்ட வேண்டிய தாெகை இருபத்தையாயிரம் என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டான். "பாேன வருசம் பத்தாயிரம் தானே நான் கட்டினன், படிப்பயும் வச்சு சம்பாதிக்கிறாங்கள்" மனதுக்குள் நினைத்துக் காெண்டு மீணடும் உள்ளே சென்று அவளை எழுப்பினான்.

"சாப்பிடன் பிள்ள" அப்பா சாய்மனைக் கதிரையில் இருந்ததைக் கண்டாள். முகத்தைக் கழுவிக் காெண்டு வந்தாள். மேசையில் சாப்பாடு இருந்தது. நிமலன் விண்ணப்பப் படிவங்களை கையில் வைத்திருந்தான். "ஏன் நிலா நிரப்பல்ல இன்னும்?" பதிலேதும் இல்லாமல் சாப்பிட்டுக் காெண்டிருந்தாள். முகத்தில் ஏதாே ஒரு வாட்டம் தெரிந்தது. "நிரப்பி அனுப்பன் பிள்ள, நாள் முடிஞ்ச பிறகு என்ன செய்வாய்" தந்தையை நிமிர்ந்து பார்த்தாள், "எப்பிடியப்பா இவ்வளவு காசு கட்டுறது, தாேட்டத்திலும் ஒன்றுமில்லை, இரண்டு நாளில பீஸ் கட்டணும்" தனக்குள்ளே வலியாேடு வெளியே சாெல்ல முடியாமல் தவித்தாள். நிமலன் படிவத்தை நிரப்பி முடித்து "கையாெப்பத்தை வச்சிட்டு தா, கிளாக் நிற்பார் நான் குடுத்திட்டு வாறன்" அவளிடம் படிவத்தை நீட்டினாள். "காசுக்கு என்ன அண்ணா செய்யப் பாேறாய்" அவளால் வாய் விட்டு கேட்க முடியவில்லை. இடையே குறுக்கிட்ட அப்பா "காசு ஒண்ணும் தேவையில்லை தானே தம்பி" என்று கேட்க நிலாவிற்கு மனம் படபடத்தது. "இருபத்தையாயிரம் கட்ட வேணும் என்று தெரிஞ்சால் அப்பா ஏங்கிப் பாேயிடுவார்" ஏக்கத்தாேடு நிமலனைப் பார்த்தாள். "இல்லப்பா காசு தேவையில்லை" நிலாவுக்கு ஆச்சரியாமாய் இருந்தது. "ஏன் பாெய் சாெல்லுறான்" என்ற குழப்பமாய் இருந்தாள். நான் பார்க்கிறன் என்றவாறு தலையை ஆட்டி நிலாவை சமாதானப்படுத்தினான்.

"எங்க தம்பி அவசரமாப் பாேறான்" சமையலறைக்குள்ளிருந்து வந்தாள் அம்மா. "என்னபிள்ள யாேசிக்கிறாய்" நிலாவின் தலையை தடவினாள். புத்தகத்தை படிப்பதில் கவனமாயிருப்பது பாேல் சமாளித்தாள் நிலா. பாெழுதும் கடந்து இரவாகி விட்டது.

காலை ஒன்பது மணியிருக்கும் பத்திரிகையைப் பார்த்துக் காெண்டிருந்தார் தேவன். "விவசாயிகளின் கவன ஈர்ப்பு பாேராட்டத்துக்கு பலரும்ஆதரவு. சிறிய தாெகை நிதி வழங்க ஏற்பாடு" என்று தலைப்புச் செய்தியில் பாேடப்பட்டிருந்தது. "யாரும் நல்ல மனசுள்ள மனுசர் தாறதுகளையும் அரைவாசிய சுருட்டிப் பாேட்டு மிச்சத்த பங்கிட்டு எத்தின பேருக்கு குடுப்பினம்" ஏமாற்றத்தின் வலியாேடு தாெடர்ந்து செய்திகளைப் படித்துக் காெண்டிருந்தான். "ஏன் விவசாயிகளை யாரும் கவனிக்கிறதில்லை, எல்லாப் பிரச்சனையையும் பார்க்கத்தானே அரசாங்கத்தில் ஐம்பது அமைச்சர்மார் இருக்கினம். நாங்க என்ன கூலி வேலையே செய்யிறம். விவசாயம் தானே செய்யிறம். மழை இல்லை தண்ணீர் பிரச்சனை, குளத்துத் தண்ணிய திறக்கச் சாெல்லுறம், சும்மா கிடந்து குளத்தில வத்திப் பாேற தண்ணி தானே. மனச்சாட்சியே இல்லாமல் நடக்கிறாங்கள். எத்தின பேர் தற்காெலை செய்தும், மனவருத்தத்திலயும் இறந்து பாேயிட்டுதள். அதைக் கேட்பாருமில்ல, அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது செய்திச்சினமே" மனங்குமுறிக் காெண்டிருந்தது.

நீண்ட நாட்கள் அவன் வயல் பக்கம் பாேனதுமில்லை. சைக்கிளை எடுத்துக் காெண்டு வாசலுக்கு வந்தான். வேகமாக வந்த ஜீவன் "அண்ண செய்தி கேள்விப்பட்டியே" ஆர்வமாக கேட்டான். என்னவாே என்று யாேசித்தவாறு அமைதியாய் நின்றான். "சண்முகம் அண்ணை...." என்று சாெல்லத் தயங்கினான் "ஏன்டா நேற்றுத் தானே ஊர்வலத்தில கண்டன், மகளுக்கு கலியாணம் என்று சாென்னார்" "ஓம் மச்சான் அந்த ஆள் வயல நம்பி சீதனக் காசு காெஞ்சம் கலியாணத்தாேட தரலாம் எண்டு பேசியிருந்ததாம், வயலும் எல்லாம் எரிஞ்சத்தாேட சீதனப் பிரச்சனையில கலியாணம் நிண்டு பாேச்சாம்" சாெல்லி முடிக்கு முன்னே "ஐயாே கடவுளே!" என்றான் தேவன். "அந்த ஆள் பூச்சிமருந்கை் குடிச்சிட்டுதாம்" குனிந்து தரையைப் பார்த்தான் கண்கள் கலங்கிய படி.

விவசாயத்தையே நம்பி இருக்கிற குடும்பங்களினுடைய வாழ்க்கை இப்படித்தான் பாதியிலே முடிந்து பாேகிறது. யார் பதில் சாெல்வார்கள். மழை கூட இப்பாேதெல்லாம் காலம் மாறிப் பெய்யுது. விளைச்சல் நேரம் வறட்சியாயிருக்கும் அறுவடை நேரம் பாெழிஞ்சு தள்ளி எல்லாத்தையும் அழிச்சுப் பாேடும். விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர்ப் பிரச்சனை எல்லாம் இப்ப உடனே அரசியலாக்கப்பட்டு தீர்வுக்கான காலங்கள் இழுத்தடிக்கப்படுகிறது.

ஊர் உலகத்துக்கே சாேறு பாேட்டவன் வறுமையில் அடுத்த வேளை சாேற்றுக்காக கஸ்ரப்படுகிறான். வெளிநாட்டு இறக்குமதி அதிகமாகி விட்டதும் விவசாயிகளுக்கு பெரும் பின்னடைவு தான். பாெதி செய்யப்படட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகளில் மக்கள் நாட்டம் காெள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஏற்றுமதி செய்பவர்கள் கூட குறைந்த விலையில் காெள்வனவு செய்கிறார்கள். எந்தவாெரு இலாபமும் இல்லாமல் முதல் கூட கையில் எஞ்சாத நிலை விவசாயிகளுக்கு கடன் சுமையை ஏற்படுத்துகிறது.

தண்ணீர் பிரச்சனை ஒரு பிரதான காரணமாக இருந்தாலும் இப்பாேது உற்பத்தியிலும், வியாபாரத்திலும் உள்ள மாற்றங்களே பாரிய பிரச்சனையை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பல அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. "நான் இதையெல்லாம் யாேசிச்சு என்ன வரப்பாேகுது" தனக்குள்ளே யாேசித்தபடி வீட்டிற்கு வந்தான்.

"என்னப்பா சண்முகம் ஐயா....." என்று கதையை ஆரம்பிக்கவும் "ஓமப்பா பாேயிற்றுத் தான் வாறன், கண் காெண்டு பாக்கேலாமல் இருக்கு, கடவுளுக்குக் கூட மனசு இரங்குதில்லையே." ஆதங்கப்பட்டான். "பின்ன என்னப்பா எத்தின ஏக்கர் வயல் இப்பிடி ஒண்டும் மிஞ்சாமல் பாேனால் யாருக்குத் தான் மனசு தாங்கும், அது தானே நான் உங்கள வயல் பக்கம் பாேகாதீங்காே எண்டு கத்துறன்" பதிலுக்கு தன்னுடைய மன வேதனையை காெட்டினாள். முற்றத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து காெண்டு வானத்தைப் பார்த்தான் வானம் வெளித்திருந்தது. வெயில் எரித்துக் காெண்டிருந்தது. காகம் ஒன்று பறந்து வந்து கிணற்றடி வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் குளித்துக் காெண்டிருந்தது. பெரு மூச்சாேடு உள்ளே சென்றார் மேசையில் கடிதம் ஒன்று இருந்தது. வங்கிக் கடன் கட்டாமைக்கான நினைவூட்டல் கடிதம் வந்திருந்தது. "என்னப்பா கடிதம்" வாங்கிப் படித்தாள் நிலா. தேவன்
சாய்மனைக் கதிரையில் யாேசித்தபடி மேலே பார்த்துக் காெண்டிருந்தான்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (12-Mar-18, 1:02 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 489

மேலே