மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி 24

மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௪

மாலதி விழிகளில் தெரிந்த அபரிதமான காதல் ரேகைகள் கார்த்திக்கின் காயத்தில் மேகத்தால் செய்த பட்டு துணியால் ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது..
அவள் நிச்சயமாக என்னை விரும்புகிறாள்,நாமே காதலை நேரில் சொல்ல தயக்கம் காட்டும் போது அவளால் இதற்கு மேல எப்படி தன் அன்பை புரிய வைப்பாள் ...இனி காலம் கடத்தினால் காதலும் காலாவதியாகி விடும் நாளை இறுதி முயற்சி செய்வோம் என்று இடது இதயத்தில் வலது கை வைத்து நூறாவது முறையாக சத்தியம் செய்து கொண்டான்..

என்னடி ரொம்ப பிகு பண்ணுன ஆனால் இன்னைக்கு பொசுக்குன்னு அவன் கையில் காயத்தை பார்த்ததும் ஓடி போய் கட்டு போட்டு விட்ட ...இவ்ளோ அன்பை வைச்சுக்கிட்டு அவனை ஏங்க வைப்பது நியாயமானு நீயே சொல்லு என்று பர்ஹானா அலுத்து கொண்டாள்...
இல்லடி நானும் கொஞ்சம் அதிகமாகத்தான் போய்ட்டேன்..பாவம் கார்த்திக் ..கைல ரத்தத்தை பார்த்ததும் என்னை அறியாமல் எனக்குள்ள இருந்த காதல் அவன் பக்கம் இழுத்துட்டு போயிருச்சு ..இவ்ளோ நாள் அவனை அலைய விட்டதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்கணும்..எனக்கு அவனோட அன்பை புரிய வைக்கணும் னு எவ்ளோவோ ட்ரை பண்ணிட்டான் ..இனிமேல் அவனை காயப்படுத்த கூடாது என கவலை தோய்ந்த குரலில் பேசினாள் மாலதி...

என்னடா என்னைக்கும் இல்லாத திருநாளா ரத்தக்காவுலம் வாங்குற ...அவ என்னடானா எதோ நீ கைய புல்லா அறுத்த மாதிரி பயப்புடுறா...எங்க உன் கைய காட்டு என்று சலீம் கார்த்திக்கின் கையை பிடித்து திருப்பி பார்த்தான்..
டேய் என்னடா பேணா முள்ளுட்ட குத்துன்னு மாதிரி நினைச்சேன் ..இது என்னடா கோணி ஊசியால் குத்துன்னு மாதிரி இவ்ளோ பெரிய தடமா இருக்கு...அவளோட முழு பேரையும் எழுதி இருந்த நரம்புலாம் கரும்பு மாதிரி சக்கையாகி இருக்கும் போல என கிண்டலடித்தான்....
அப்புறம் என்ன மச்சான் ஒர்கவுட் ஆகிருச்சு போல ....எப்போ ட்ரீட் வைக்க போற ...இல்ல உன் மேல நம்பிக்கை இல்லை ...நாளைக்கு லவ் சொல்லுற ..கூட நான் இருக்கேன்..அப்புறம் எல்லோருக்கும் சேர்த்து க்ராண்டா கொண்டாடலாம் என்று பிளான் போட்டான் சலீம்...

ஏய் இங்க வாயேன் ...வந்து பாரு இவா செஞ்சுருக்குற வேலைய என்று உரக்க கத்தி கூப்பிட்டாள் ஜெனிபர்...
என்னடி என்னைய கூப்பிடுறேன்னு சொல்லி ஊரை எல்லாம் கூப்பிடுற மாதிரி தண்டோரா போடுற என சொல்லியவாறு அவளருகே வந்தாள் பர்ஹானா...
மாலதி நோட்டை கையில் வைத்திருந்தால் ஜெனிபர்..
கார்த்திக் எழுதிய கவிதை இவ கிட்ட எப்படி கிடைச்சுது...அதாச்சு பரவ இல்லை ஆனால் அவ அதுக்கு பதில் கடிதம் எழுதி வைச்சு இருக்கறதை கூட மறைச்சுட்டா பார்த்தியா..இதை எழுதி ரொம்ப நாள் இருக்கும் போல என அதை வாசிக்க ஆரமித்தாள்...

என் உயிரை பிளந்து காதலெனும் உணர்வை கலந்த என் ராட்சசனே ...
நீ எழுதி இருந்தாய் கவிதையாய் ...
உனக்கு நான் எவ்வளவு முக்கியமென்றும் ..எவ்வளவு அன்பு வைத்திருப்பதாகவும் ..
நீ எழுதாமல் விட்டால் கூட என் உள்ளுணர்வுகள் அறியும் . நான் என்னை நேசிப்பதை விட நீ என்னை நேசிப்பது..
நான் எனக்காக அலுத்து இருக்கிறேன்...ஏன் எனக்காக மற்றவர்கள் அழுதிருக்கிறார்..ஆனால் என்னை அழவைத்த பெருமை உன்னைத்தான் சேரும்..காதலின் ஆழம் எதுவரை என்று எனக்கு தெரியாது ..ஆனால் நீ அதன் அடியாழத்தில் எனக்காக மூர்ச்சையற்று கிடக்கிறாய்...உனக்காக நான் என்ன கொடுத்தேன்...எதற்காக என்னை இவ்வளவு நேசிக்கிறாய்..உன் நேசிப்பில் நான் உயிர் துறந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது ...எனது தந்தையின் அன்பு அளப்பரியது ..இவ்வளவு காலமாய் நான் அருகிலிருப்பதால் உணர்ந்தேன் ...ஆனால் உன் அன்பை உன் கண்ணை பார்த்து விட்டு பிரியும் போதே உணர்கிறேன்..
நான் எப்படி சொல்லுவேன் .. எப்படி வெளி படுத்தினால் என் காதல் முழுமையாக தெரியும். காதல் ஜெயிக்குமா இல்லையா,சாதியோ மதமோ,சதையோ நிறமோ,எதையும் பார்த்து வருவதில்லை ...
உன் காதல் நிஜமாக இருப்பின் ...அதை நான் தடுத்தாலும் என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் ...அன்புடன் என முடித்து இருந்தது அந்த கடிதம்...

எங்க அத கொடு என ஜெனிபரிடம் வெடுக்கென அந்த கடிதத்தை பறித்து தன் புத்தகத்தில் மறைத்து கொண்டாள்...மாலதி கிட்ட சொல்லாத நான் இத எடுத்தேன் என்று பின்னாடி இத வைச்சு செய்யலாம் என நகர்ந்தாள் பர்ஹானா..

கார்த்திக் என் இவ்ளோ லேட் இன்னைக்கு வேற டியூஷன் வேற போகல ..கைல என்ன பிளாஸ்டர் ஒட்டி இருக்க என்ன ஆச்சுப்பா என வினவியபடி கார்த்திக்கின் அம்மா வந்தார் . இல்லமா இன்னைக்கு போகல உடம்பு கொஞ்சம் அசதியா இருக்கு ..இதுவா பஸ்ஸில் வரும்போது கம்பி தெரியாம இழுத்து விட்டுருச்சு வேற ஒண்ணுமில்ல என்று சமாளித்தான்.
சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்தான் ..தூக்கம் கண்ணை சொக்கிய மாதிரி இருந்தது ....
கட்டிலுக்கு போனான் அதில் சுபாவின் குட்டி பொம்மை ஓன்று கிடந்தது ...இத யாரு இங்க வைச்சது என எண்ணியவாறு அதை எடுத்து தலைமாட்டில் வைத்துவிட்டு தூங்க சென்றான் ...இரவின் குளிர்ச்சி ஒரு புறம் கையில் இருந்த காயம் மறுபுறம் என அவனை எப்போது தூங்க விட்டது என தெரியவில்லை..

இப்போதான் தூங்குனோம் அதுக்குள்ள விடுஞ்சுருச்சு போல என எண்ணியவாறு அவசரமாய் குளித்தான்...எப்போதும் போல நிற்கும் பஸ் ஸ்டாப்பில் நிற்க ..அதற்கு முன்னரே மாலதி வந்து இருந்தாள்...
கார்த்திக் வந்ததும் அவனருகில் வந்தாள்..
என்னோட கொஞ்சம் வரியா உன்னிடம் மனம் விட்டு பேசணும் என அவள் சொல்லவும் கார்த்திக்கின் நரம்பு வழியாக மின்சாரம் பாய்ச்சியது போல பரவசமானான்...
அந்த கடைக்குள்ள போவோம் வா என கார்த்திக்கின் கையை பிடித்து அழைத்து சென்றாள்...அவளை மட்டுமல்லால் அவனையே அவனால் நம்ப முடியவில்லை ...ரெண்டு ஐஸ் கிரீம் வெண்ணிலா பிளேவர் என்று சொல்லிவிட்டு கார்னரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்..
கார்த்திக்கு கையும் ஓடல களும் ஓடல...காலை பனியிலும் வேர்த்து கைகள் நடுக்கம் பரவியது..ஐஸ் கிரீம் வந்ததும் சிறிது எடுத்து சுவைத்து விட்டு அதை கார்த்திக்கிடம் கொடுத்தாள்...
என்ன பாக்குற உன்னோடத கொஞ்சம் சாப்பிட்டு எனக்கு கொடு என மாலதி கார்த்திக்கின் கை விரலை பிடித்தாள்...
ம்ம் அவனுக்குள் வார்த்தை ஏதும் வர தோன்றாமல் திணறி கொண்டிருந்தது...

என்ன சர்ப்ரைஸ்ஆ இருக்கா..எனக்கு கூட இது புதுசுதான் இருக்கு ..எவ்ளோ நாள்தான் மறைச்சு வைக்க ...எனக்கும் ஆசை இருக்கு இப்படி உன்னோட உக்காந்து ஐஸ் கிரீம் சாப்பிடணும் ..படத்துக்கு போகணும்..இன்னும் ரொம்ப ஆசைகள் இருக்கு .எல்லாத்தையும் விட உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தனும் னு ....
இ லவ் யூ கார்த்திக் ..இ லவ் யூ சோ மச் கார்த்திக் ...மாலதி சொல்ல சொல்ல கார்த்திக்கின் இதயம் எகிறி குதித்து சந்தோசத்தில் திக்கு முக்காடியது...
நீதான் என்னிடம் முதல்ல லவ் சொல்லுவன்னு நினைச்சேன் பட் என்னால எதுக்கு மேல அடக்கி வைக்க முடியாது அதான் இப்போவோ சொல்லிட்டேன் ...

நான் இவ்ளோ பேசுறேன் நீ என்ன என்னையே பார்த்துகிட்டு இருக்க என்றால் மாலதி...
என்னிடம் வார்த்தைகள் இல்லை கவிதைதான் உள்ளது அதை வாசித்து காட்டுகிறேன் என அவளின் இதழில் அருகில் சென்று கண்களை மூடி கொண்டு ....
முத்தம்
அன்பின் ஆழத்தை உணர்த்த,
நான்கு இதழ்களும் சண்டையிட்டு கொள்ள தேர்ந்தெடுத்த அகிம்சை ஆயுதம்
என்றவாறு நெருங்கினான் ...அவள் இதழ்களின் கதகதப்பு மிக சமீபத்தில் இருந்தது...

அதே நேரம் முதுகில் பலம் கொண்ட மட்டும் யாரோ அடிப்பதை பார்த்து வெலவெலத்து எழுந்தான் ......

தொடரும்....

எழுதியவர் : சையது சேக் (11-Mar-18, 8:24 pm)
பார்வை : 314

மேலே