வாழ்க்கை பள்ளி
வீரம் கூர்மையான
ஆயுதத்தால்
வருவதில்லை
காகிதமும் ஆயுதமாகும்
வீரனுக்கு
அரிது அரிது
நல்நட்பு அரிது
சொல் கல்லால்
அதை காயமாக்காதே
நட்பு ஓரு வீணை
நம்பிக்கை எனும்
தந்திகளால் ஆனது
கல்வியில் சந்தேகம்
பெருமை
கலவியில் இல்லாள்
தீண்டும்போது
சந்தேகம் சிறுமை
நன்றி என்பது
இதயம் பேசுவது
உதடுகள் அதன்
கருவிகள்
வறுமையிலும்
பன்புகளை
இழக்காதவர்கள்
மேன்மக்கள்
இளமையில்
வறுமை
வெந்நீரில் நீந்தும்
மீன்கள்
பணம் பார்த்த நட்பு
நல்குணமில்லா நட்பு
அறிவு வளர்ந்தால்
மனிதனின் முதல்
ஆராய்ச்சி கடவுள்மீதுதான்