உலகமயமாக்கல்னு ஒரு பூதமுங்க

வேர்க்கடலை கிழங்கு விற்ற
நம்ம பாட்டிய கொன்னுட்டோமுங்க
தள்ளு வண்டியில் வாழைப்பழம்
விற்ற நம்ம தாத்தாவ தொலைச்சிட்டோமுங்க..
வீடுவீடாய் மீன் விக்கற அம்மாவும்
இப்போ வர்றது இல்லங்க....
செட்டியார் நாடார் கடையெல்லாம்...
கொஞ்சம்கொஞ்சமா அழியுதுங்க...
ரோடோர சாப்பாட்டு கடை கொறஞ்சிடுச்சிங்க
சாப்பாட்டு வெல கூடுடிச்சுங்க .
உலகமயமாக்கல்னு ஒரு பூதமுங்க
அதுக்கு ஏழை பணக்காரன் பேதமுங்க
அது நம்ம நோக்கி வருதுங்க...
நம்ம பரம்பரையாய் கட்டிவச்ச
கடைதெருவ காலி செய்ய..
அரசு உத்தரவு தறுதுங்க ...
அதுல வால்மார்ட் வந்து
குடித்தனம் நடத்துமுங்க...
கும்மாளம் போடுமுங்க ...
பணத்தை ரெடியா வச்சுக்குங்க...
அவன்கிட்ட கொடுத்துட்டு
ஆண்டியா நின்னுடுங்க...
சொல்றத சொல்லிப்புட்டேன்
கேக்கறவங்க கேட்டுக்குங்க...
அவன் விக்கிற பொருளுக்கு
விலை உங்களுக்கு தெரியாதுங்க...
பார்க்கோடு சிஸ்டமுங்க...
வாங்கத்தான் இஷ்டமுங்க ...
பணம் மொத்தமும் நஷ்டமுங்க...
அதனால நல்லா கேட்டுக்குங்க...
நம் தேவையை நாமே பூர்த்தி செய்யும்
தற்சார்பு பொருளாதாரம் தான்
நாட்டுக்கு எப்போதும் ஆதாரமுங்க..
வெளிநாட்டு பொருள முடிஞ்ச மட்டும்
தவிர்த்துடுங்க தாத்தா பாட்டிகிட்ட
வாங்கினா நம்ம மனசு குளிர்ந்துடுங்க..
அவங்க உயிர் பிழச்சிடுமுங்க...
சொல்றத சொல்லிப்புட்டேன்
செய்யுறத செஞ்சிடுங்க...

எழுதியவர் : (13-Mar-18, 10:51 am)
பார்வை : 58

மேலே