தனிமை

எனக்கு ஆறுதல் என் தனிமை மட்டுமே ..
என் தனிமையில் மட்டுமே என் இதயத்திடம் பேசுகிறேன் ..
என்னுள் இருக்கும் கோபம் வெறுப்பையும் உணர்த்துவதும் என் தனிமை தான் ..
என்னுள் இருக்கும் அளவு கடந்த அன்பு பாசத்தை உணர்த்துவதும் என் தனிமை தான் ..
ஆம் எல்லாமே என் காதல் தனிமையிடம் மட்டுமே..
என்னை விட்டு போன சந்தோசங்களை நினைவு படுத்துவதும் என் தனிமை தான் ..
எனக்குள் இருக்கும் பகிரமுடியா சோகங்களை நினைவுபடுத்துவதும் என் தனிமை தான்..
சில நேரங்களில் என் சோகங்களுக்கு தாய் மடி என் தனிமை தான்..
ஆம் அதனால் தான் தனிமையை மட்டுமே காதலிக்குறேன் ..
என் தனிமையில் மட்டுமே என் மனதை யாரும் ரண படுத்த முடியாதல்லவா..
சில நேரம் என் தனிமை சுடும் நெருப்பு ..இருந்தும் உன்னை மட்டுமே காதலிக்கிறேன் ..
சில நேரம் என் தனிமை அந்த நெருப்புக்கு மருந்து ..
அதனாலே வழி தேடுகிறேன் என் காயத்திற்கு மருந்தை ...


  • எழுதியவர் : roja
  • நாள் : 13-Mar-18, 1:37 pm
  • சேர்த்தது : ரோஜா
  • பார்வை : 369
  • Tanglish : thanimai
Close (X)

0 (0)
  

மேலே