எங்கே போனது மனித நேயம் , பூத தயை

தெரு விளக்கு மின்சார கம்பியில்
சிறகு பட' மாண்டது காகம்;
வெந்த உடல் தரையில் வந்து வீழ்ந்தது
அக்கணமே அதைச் சுற்றி காகங்கள்
இறந்த காகத்திற்கு ஒப்பாரி காகத்தின்
கரையலில்.....!!!!, பார்த்துக்கொண்டே இருந்தேன்
சில காகங்கள் அலகால் இறந்த காகத்தை
அங்கிருந்து அகற்றிவிட்டு- ஓர் சடங்கே
செய்து முடித்துவிட்டப்பின் தான் ஓய்ந்தன
கரையிலும் ஓய்ந்தது ......அமைதி

ஆங்கு, தெருவில் எங்கிருந்தோ ஓடிவந்தான்
ஒரு சொகுசு நான்கு சக்கர வாகனக்காரன்
வந்தவேகத்தில் தெருவை கடக்க வந்த
மனிதன் அடிபட்டு துடிக்கிறான்
அந்த வாகனமும் காற்றாய் மறைய,
'போலீஸ் வரும் வரை கேட்பார்
இல்லாது தவிக்கிறான் அடிபட்டவன் தெருவில்,
ரத்தம் பெருகிவந்து காயும் தருவாயில்
போலீஸ் வந்தார், நபர் உடல் 10 8 ஆம்புலன்ஸல்.....
மனிதா! உன்' மனிதநேயம்' எங்கே பறந்து
போனதோ..... நீ ஆறறிவு படைத்தவன் தான்!
இன்னும் அந்த சிற்றறிவு காகத்திலிருந்து நீ
கற்கவேண்டியது அந்த 'பூத தயை '

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Mar-18, 1:52 pm)
பார்வை : 117

மேலே