மரணம் பிறப்பினைப் புனைகிறது

வாழ்க்கை வாழ்தலை ஸ்பரிசிக்கிறது

என்னை நான் தடவிக் கொண்டேன்
‘ஈரம், உலர்த்தி தெரிந்தன’
என நினைத்துக் கொண்டேன்
தவறு செய்தேன்
சரியைத்தேடினேன்
கிடைத்ததை “சரி” என கூறிவிட்டேன்
பொய்யை “உண்மை” அன்று கூக்குரலிட்டேன்
உண்மை என்பது இருக்கும் என தெரிந்தும்,
அது என்னிடம் இல்லை என்று அறிந்தும்
தாறுமாறாக நடைப் போட்டேன்
‘சரியாக இருப்பது சரியாகாது’ என முடிவு சேய்தேன்
பாதுகாப்பாக இருப்பதற்காக நானெ கர்ஜனைச் செய்தேன்
என்னை நான் ‘நானென்று எண்ணிக் கொண்டேன் –
ஆனால் என்னிலிருந்து நான் என்றோ நழுவிப் போய்விட்டேன்
நான் தொலைந்துவிட்டேன் எங்கேயோ? எதிலேயோ?

வாழ்க்கை வாழ்தலை ஸ்பரிசிக்கிறது-

மரணம் பிறப்பினைப் புனைகிறது

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (13-Mar-18, 3:20 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 95

மேலே