காதலை சொல்ல வந்தேன்

காதலை சொல்ல வந்தேன்

உன்னை கண்டதும் இமைக்க மறக்கும் என் இமைகள்
காதலை சொல்ல வருகையில் பல முறை இமைக்கிறது...

நீ சென்ற திசையெங்கும் சுற்றி திரிந்த என் கால்கள்
காதலை சொல்ல நடக்கையில் முன்னும் பின்னும் தல்லாடுகிறது...

உன் பெயரையே சொல்லி துடித்த என் இதயம்
காதலை சொல்ல நினைக்கையில் பலவினமாய் துடிக்கிறது...

தனிமையில் ஆயிரம் முறை காதலை சொன்ன என் இதழ்கள்
காதலை சொல்ல வருகையில் பேச அஞ்சுகிறது...

உன் முகம் மட்டுமே பார்த்த என் விழிகள்
காதலை சொல்ல பார்க்கையில் வெட்கத்தில் சிவக்கிறது...

உன்னை மட்டுமே நினைத்த என் மனது
காதலை சொல்ல வருகையில் உன்னை மட்டுமே நினைத்தது...

உன்னை அழைத்த போது
நீ பார்த்த ஒரு நொடி பார்வையில்
உன் விழிகள் சொன்னதடி...
உன் பதிலை.....


Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (13-Mar-18, 7:48 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 353

மேலே