புரிவதில்லை

உலகை
ஒளியாக பார்ப்பதும்
ஒளியை
இயற்கையென
பார்ப்பதும்
இயற்கையை
கடவுளென பார்ப்பதும்
கவிஞனின் படைப்பாற்றல்

ஆணுக்கு
பெண் புரிவதில்லை
பெண்ணுக்கு
ஆண் புரிவதில்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அலி புரிவதில்லை
இம்மூன்றும் கவிஞனுக்கு
புரியும்
கவிஞன்
ஆண் பெண் அலி
மூன்றின் வடிவமானவன்
படைப்பதனால்
கவிஞனும் கடவுளானவன்
இயற்கை கவிஞனின்
எழுதி வாங்காத சொத்து...


Close (X)

0 (0)
  

மேலே