மெய்நிலை தேடல்

முகத்திரைகளை
விலக்கி வைத்தால்
சிரிப்பதே அரிதாகிடுமோ
என அச்சம்...!
பொய்க்கால்
குதிரையின் மேல்
இராஜ பவனிகள்
இறங்க முடியவில்லை...
இறங்கத் தெரியவில்லை...!
பணமெனும் ஓவியத்தை
வரைந்து வரைந்து
தூரிகை மட்டுமல்ல
விரல்களும் தேய்ந்து விட்டது...
எங்கேயோ தவறவிட்டுவிட்டேன்
சுயத்தை!
கடிகாரங்களும் மணித்துளிகளும்
ஏராளம்...தேடிட
மனம்தான் போதவில்லை...

எழுதியவர் : சுரேஷ் குமார் (15-Mar-18, 9:37 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 95

மேலே