பெண்

பெண்ணும் கோயில் தான்
கருவறை கொண்டுள்ளதால்

பெண்ணும் தெய்வம்தான்
இருட்டறையில் இருப்பதால்

ஆண்களுக்கு கள்ளுப்பால்
கொடுக்கும் சமூகம்தான்
பெண்ணுக்கு கள்ளிப்பால் கொடுக்கின்றது

உள்ளதை அறியும் கருவி
பெண்ணுக்கு கருவறை உள்ளேயே
கல்லறை செய்துவிடுகின்றது

பூவின் மணம் முடிந்ததும்
இவள் மணம் முடிந்ததும்
பூவைப்போல் இவள்
மனம் தூக்கி எறியப்படுவதால்
இவள் பூவை

கணவன் கட்டிய கட்டை
அவிழ்க்கப்படும்போது
இவளைத்தான் ஏறவைத்தனர்
உடன்கட்டை

பூவை என்பதால்
பூவை எடுத்தனர்

வெண்ணிலாவோடு ஒப்பிடுவது
வெந்நிறத்தைக் கொடுப்பதைக்கா

பாவங்களைத் தாங்கிக்கொண்டு
பாவைபோல் இருப்பதால்
பாவம் இந்தப் பாவை

கண்மை வைத்தால்கூட
அதில் பிறருக்கு நன்மை
இருக்கச் செய்பவள்
இந்தப் பெண்மை

பெண்மையைப் பேணாமையைக் கண்டு
அவளின் நிலமையைக் கண்டு
நீல மையைக் கண்ணீராய் வடித்தது என் பேனா மை

சில பெண்கள்
துணியைத் துவைப்பதுபோல்
துணைவனைத் துவைப்பதுண்டு

கண்ணை அடிப்பதுபோல்
கணவனை அடிப்பதுண்டு

எழுதியவர் : குமார் (17-Mar-18, 2:18 pm)
Tanglish : pen
பார்வை : 212

மேலே