பயணம்
கருப்பு-வெள்ளை உரையாடல்கள்!
நீண்டு கொண்டே சென்றது..
நானும் அதனோடே--
எங்கே செல்கிறது?
எங்கு முடிகிறது?
இந்தக் கேள்விகள்
ஏனோ?
எழவில்லை!!!
வருடல்கள் தரும்
குளிர் வெண்காற்று!
அப்பப்பொழுது
முத்தமிடும் மழைச்சாரல்....
கண்டதும் ஒளிந்து கொள்ளும்
முகில் கூட்டம்....
பச்சைப் போர்வை
போர்த்திய தேசம் அடைந்தேன்...
ஆகாயம் விடுத்து,
சிகரம் கடந்து,
சேற்றோடு உறவாடல் பெற்று
முடிவில்லாமல் தித்திக்கும்
அருவியில்
மூழ்கலானேன்....
வலியும்,வேதனையும்
சோகமும்,துயரமும் அதனில்
தொலைத்தேன்...
புத்துயிரும் உள்ளத் தெளிவும்
பெற்றேன்...
சிறியக் கோப்பையில்
ஒருவரின் கடையில்
அருந்திய தேநீர்
அன்றைய அமுதம்!!!!!
மீண்டும் செல்லத்
தோன்றுதே அந்த பயணம்....