வெண்ணிலா வருகை
வானில் மின்மினிப் பூக்கள் பூத்திருந்தது
அந்த வெண்ணிலா வருகைக்காக
நிலமகளும் காரிருளில் குளித்தால்
அந்த வெண்ணிலா வருகைக்காக
தென்ற லிசைக்கும் மரங்களும்
மௌனராகம் பாடியது
அந்த வெண்ணிலா வருகைக்காக
ஆனந்த ராகம் மீட்டும் கொஞ்சும்
பறவைகளும் கெஞ்சியே நின்றன நிசப்தத்தை
அந்த வெண்ணிலா வருகைக்காக
வெண்ணிற பூக்கும் நறுவீகளும் நல்மனம் வீசின
அந்த வெண்ணிலா வருகைக்காக
சில வண்டுகளும் பூச்சிகளும் இடைவிடாத ரீங்கார நாதமிசைத்தது
அந்த வெண்ணிலா வருகைக்காக
பகலவனும் இமை மூடினான்
அந்த வெண்ணிலா வருகைக்காக
கவி பாடும் மாந்தர் விளிகளும் விசும்பு நோக்கியே நின்றது
அந்த வெண்ணிலா வருகைக்காக!
இவையெல்லாம் அந்த வெண்ணிலா வருகைக்காக அல்ல
இந்த வெண்ணிலா நினைவுகளுக்காக!