இயந்திர வாழ்க்கை

நான் மட்டும் அல்ல
சுற்றி திரிந்து
அலைந்து திரிந்து
காலை உணவு
உட்கொள்ள மறந்து
படித்து முடித்து
மதிப்பெண் பெற்று
நிம்மதி இழந்து
ஊர் விட்டு ஊர் வந்து
பயந்து பயந்து
ஒரு ஒரு அடியையும்
பார்த்து பார்த்து வைத்து
வேலையில் சேர்ந்து
உழைத்து உழைத்து
சேர்க்கும் பணத்தை
சிக்கனமாய் செலவு செய்து
சேமித்தும் வைத்து
நாம் எங்கே செல்கிறோம்?
எதை தேடி செல்கிறோம்?
நம் தேடல் எங்கே முடியும்?
இந்த இயந்திர வாழ்க்கையில்
நம் வாழ்க்கை எங்கே?
நமக்கான சந்தோஷங்கள் எங்கே?

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-Mar-18, 9:12 am)
சேர்த்தது : உமா
Tanglish : iyanthira vaazhkkai
பார்வை : 278

மேலே