எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்
என்றே உள்ளம் கொண்டு
நல்லாள் வழி
நடந்திடு மானிடனே!
நமை விதையாய் தூவிய
அவன் கைகள்
மழையாய்ப் பொழிந்து
நமை காத்திடுமே!
பயிராய் நாம் முளைத்து
மரமாய் நாம் வளர
ஒளியாய் அவன் நிற்பான்
அண்டங்கள் பயிலும்
அறிவை வளர்ப்போம்!
நெஞ்சங்கள் இணையும்
நல் உறவு வளர்ப்போம்!
தேசங்கள் தாண்டியும்
பாசங்கள் வளர்ப்போம்!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Mar-18, 12:51 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : ellam avan seyal
பார்வை : 124

மேலே