ஆசைப்பட மட்டும்

ஆசைப்பட மட்டும் !

உழவு வயலில் உருண்டு
புரள ஆசை !
குளத்துக்குள் குதித்து
நீந்தி வர ஆசை
ஆர்ப்பரித்து விழும் அருவி
உச்சந்தலையில்
வாங்கி நிற்க ஆசை
சுற்றி வர மரங்களுக்குள்
அமர்ந்திருக்க ஆசை
காதுக்குள் எப்பொழுதும்
சல சல வென
ஓடும் நீரின் ஓசை
கேட்க ஆசை
பச்சை நிற புல்லின்
மேல் படுத்து உறங்க
ஆசை !

இத்தனைக்கும் ஆசைப்பட்டு
அறுபதாம் தளத்தில்
ஆகாயத்தில் குடியிருக்கிறேன்
எங்கோ கண் காணாத
தேசத்தில் ! வயிற்று பிழைப்புக்கு

பக்கத்தில் இதை போல்
பல நூறு கட்டிடங்கள் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Mar-18, 12:22 pm)
பார்வை : 96

மேலே