விழிப்பாயா மனிதா
உடம்புக்கு புத்துணர்ச்சி
மனதுக்கு மகிழ்ச்சி
கண்ணுக்கு குளிர்ச்சி
இன்பமே இயற்கை
மண்ணுக்கு வளமே
நாட்டிற்கு பலமே
பறவையின் குரலொலிகள்
கற்பனைக்கு உரமே
இனிமையே அருவி
இசைத்திடும் குருவி
பனிமலைக் குளிரில்
உற்சாகம் ஒளிரும்
அழிப்பதைக் குறைப்போம்
நிலைக்கட்டும் இயற்கை
விழிப்பாயா மனிதா
செல்வமே இயற்கை